காலங்கள் கடக்கிறது

 இன்று நான் பார்த்து வியந்த ஒரு விளம்பரத்தை தான் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன். 

கேட்பரி டைரி மில்க் சாக்லேட் ( Caudbery Dairy milk) விளம்பரம்  1993 வெளிவந்தது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

நான் பார்த்து வியந்து மகிழ்ந்து விளம்பரம் என்று சொல்லலாம்.

90ஸ் கிட்ஸ் எனப்படும் சிலருக்கு இந்த விளம்பரம் பரிச்சயமானது தான். பெண்கள் இப்படித்தான் உட்காரவேண்டும் , சிரிக்க வேண்டும் விளையாட வேண்டும் என்று சொல்லிப் பழகிவிட்டோம் நம் சமுதாயத்திற்கு இந்த விளம்பரம் சவுக்கடியாக இருந்தது.

தன் காதலன் மட்டைபந்து வீரர். ஒரு மிட்டாயை எடுத்துக்கொண்டு ஸ்டேடியத்தில் செல்கிறாள் காதலி. அனைவரையும் தாண்டி தன் காதலன் வென்று விட்டதை எண்ணி உலகம் மறந்து அந்த ஸ்டேடியத்தில் உற்சாகமாக தன் சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறாள். 

இந்த விளம்பரத்தை காணும் அனைவருக்கும் தன்னை மறந்து ஒரு புன்னகை பூக்கும். அதுவே இன் விளம்பரத்தின் வெற்றி. 

அதே விளம்பரத்தை  மீண்டும் 2021ல் பெண்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு வெளியிட்டுள்ளது. 

பெண் மட்டைபந்து வீரர்களை உற்சாக படுத்தும் வகையிலும் பெண்ணியத்தை போற்றும் வகையிலும், ஆண்களின் புரிதலும் இந்த விளம்பரத்தில் வெளிப்பட்டுள்ளது .

இதில் காதலன், காதலி கிரிக்கெட் விளையாடுவதை பார்த்து மகிழ்ந்து  உற்சாகத்திதை வெளிப்படுத்தும் விளம்பரமாக அமைந்திருக்கிறது.

அதை அனைத்தையும் தாண்டி இறுதியாக Good luck girlsஎன்ற hashtag பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணாக இந்த விளம்பரத்தைக் கண்டு பெருமையுடன் மகிழ்கிறேன். 

இந்த விளம்பரத்தை ரீமேக் செய்யலாம் என்று எண்ணியவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 

இந்த விளம்பரத்தில் நீங்கள் இன்னும் பார்க்கவில்லையா? 

பார்த்துவிட்டு உங்கள் பதிவை பதிவிடுங்கள். 

நன்றி. 

வாசிப்போம் சுவாசம் உள்ளவரை! 

Comments

  1. நான் இன்னும் இந்த விளம்பரம் பார்க்கவில்லை ஆனால் உங்கள் எழுத்துருக்களால் படிக்கும் பொது இன்னும் அழகாக இருக்கிறது

    ReplyDelete
  2. விளம்பரம் பார்த்தேன்.காலத்திற்கு ஏற்ப உருவாக்க பட்டுள்ளது.பெண்களின் திறமையை ஆணாதிக்கம் இல்லாமல் ஏற்றுக்கொள்ள தொடங்கி இருக்கு,,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...