NEET - பாடம்
இப்பொழுது பெருதும் பரபரப்பாகவும் அரசியலாகவும் மாறிவிட்ட Neet பற்றி தான் இன்று பதிவிட போகிறேன்.
வீட்டிற்கு வீடு மரம் வளர்ப்போம் என்பது போய் இன்று வீட்டுக்கு வீடு மருத்துவர்கள் (டாக்டர்) வளர்க தொடங்கிவிட்ட சமுதாயமாக மாறிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு மருத்துவரின் முக்கிய குணமே மனவலிமை தான். (என்ட்ரன்ஸ் )நுழைவுத்தேர்வில் எங்கே தோற்று விடுவோமோ என்று பயந்து.. கொஞ்சம் கூட மனதளவில் தைரியம் இல்லாத பல மருத்துவர்களை தான் இந்த நீட் கொன்றருக்கிறது.
இதில் யாரை குறை சொல்வது?
சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வழிமாறி தன் வாழ்வே முடிந்துவிட்டது என்று தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களையா?
இல்லை டாக்டர் படித்தால்தன் உன் வாழ்வு சிறக்கும் என்று ஊட்டி வளர்த்த பெற்றோர்களையா?
ஏய் நீ நன்றாகப் படிக்கிறாய் எதற்காக ஆர்ட்ஸ் குரூப் எடுக்கவேண்டும் டாக்டருக்கு படி என்று நம்பிக்கை தரும் ஆசான்களையா?
இல்லை சிறு குழந்தையை பார்த்ததுமே என்ன ஆகப் போகிறாய், டாக்டரா? இன்ஜினியரா? போலீஸா? என்று கேட்க பழகிவிட்ட நம் சமுதாயத்தையா?
எனக்கும் பதில் தெரியவில்லை. ஆனால் என்றாவது ஒருநாள் இதை நாம் புரிந்து கொள்வோம் என்று நம்புகிறேன்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஒருவனுக்கு படிப்பு வாழ்க்கையை மாற்ற சக்தி தரவேண்டுமே தவிர வாழ்க்கையை முடித்துக் கொள்ள அல்ல.
எந்த பரிட்சைவவந்தால் என்ன? எத்தனை சவால்கள் மேற்கொண்டால் என்ன??முதலில் மனவலிமை வேண்டும். தன் மீது தனக்கு நம்பிக்கை தர வேண்டும். மாணவர்களே ஆசான்களே அன்பு பெற்றோர்களே இதை புரிந்து கொள்ளுங்கள்.
இனியும் எந்த தேர்வுக்கும் யாரும் வழியாக வேண்டாம்!
வாசிப்போம் சுவாசம் உள்ளவரை! !
நன்றி


Super Akka.... Good message 👍❤️
ReplyDeleteசரியான திட்டமிடுதல் அல்லது புரிதல் இல்லை. வழிகாட்டுதல் இல்லை. Plan B என ஒரு திட்டம் வைத்துக் கொள்வதில்லை. மருத்துவர் படிப்பு மட்டுமே உயர்ந்த படிப்பு என்ற தவறான எண்ணம். போதிய தன்னம்பிக்கை இன்மை. இது போன்ற காரணங்களால் தான் தற்கொலை போன்ற துயர சம்பவங்கள் நிகழ்கின்றன. இது போல மன அழுத்தம் உள்ளவர்களுக்கு உளவியல் பயிற்சி கொடுக்க தயாராக இருக்கிறேன். இன்றைய சூழலை உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்
ReplyDeleteTrueee.....
ReplyDeleteGood one... I think parents should encourage students without scarring them about exams... So student will get their minds to face anything...
ReplyDeleteGood thinker
ReplyDelete