Posts

Showing posts from 2021

காதலை காதில் வாங்கிக் கொள்ளுங்கள்

Image
 காதலைப் பற்றி எத்தனையோ பாடல் வந்தாலும். ... எத்தனையோ கதைகள் சொன்னாலும்... காதல்... காதல் தான்!  சலித்துப் போகாத ஒரே சுவை காதல் சுவை தானோ? ஆனால் காதலில் கடைசிவரை என்ற தத்துவம் மட்டும் பொய்தானோ ? எல்லார் பக்கமும் ஒரு நியாயம் இருப்பது போல, எல்லோர் வாழ்விலும் ஒரு காதல் இருக்கும்.  அழகான முதல் காதல்! அழிவில்லாத முதல் காதல்!  நீ யாரென்று உனக்கே பாடம் கற்பிக்கும்.  எதற்கு கோபப்பட்டோம் என்று உன் மீது கோபப்பட வைக்கும்.  இதற்கா அழுதோம் என்று நினைக்கும் போதெல்லாம் சிரிக்கவைக்கும்.  இப்படி எல்லாம் சிரித்தோமா என்று நினைத்து அழ வைக்கும்.   முகம் கழுவாத முகத்தில்  முதன்முதலாய முகப்பரு தோன்றும்.  அழுக்குச் சட்டை   வானவிலாகும்.    காதல் பார்வைக்காக காலங்களை கடந்து கால்கள் ஒரே இடத்தில் யாகம் செய்யும்.  அந்த ஒற்றை சிரிப்புக்காக உயிர் மலர்களும் பூத்துக் குலுங்கும்...  தன்னைத்தானே அழகாய் காட்டும் மாயக்கண்ணாடி காதல்.  தன்னைச் சார்ந்தவர்களுக்கு  தர்மன் அவதாரம். சில நேரங்களில் இச்சை மனம் துச்சை கொண்டதால் துச்சா...

சபாஷ் இந்தியா சபாஷ்

Image
அருமையான அரசியல் -  இந்தியா என்னடா எடுத்ததும் இப்படி ஆரம்பிக்கிறாளேன்னு  பாக்குறீங்களா?? வேற எப்படி சொல்றது??  ஒரு கார் வாங்கணும்னு ரொம்ப ஆசை கஷ்டப்பட்டு பல வருஷம் கழிச்சு ஒரு கார் வாங்கினா. ..  டயருக்கு...லைட்டுக்கு...இன்ஜினுக்கு.. சீட்டுக்கு ...  தனித்தனியா ஜிஎஸ்டி. சரி ஆசையா முதன்முதலாக வாங்கர காரு. வாங்கியாச்சு.  பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி. சரி... பரவால்ல ரோடு நல்லா போட்டு இருக்கீங்களா?  போட்டிருக்கு. டோல்கேட் வோட... ஒவ்வொன்றுக்கும் ஜிஎஸ்டி கட்டி கடைசில பாவம் ஏழை இந்தியாக்கு டோல்கேட்டும் கட்டிவைச்சிருக்குல?  படிக்கணும்னு ஆசை வச்சிட்டு அதுக்கு காசு கட்ட முடியாம கல்வி கடன் வாங்கரான். அவனுக்கு கல்விக்கு தள்ளுபடி இல்லை. ஆனால் பாவம் பணத்தை ஒளித்து வைக்க முடியாத அளவுக்கு காசு இருப்பவனுக்கு கவர்மெண்ட் தள்ளுபடி செய்யும். வாங்குற 5000 சம்பளத்துக்கு அக்கௌன்ட் வேண்டும் என்றது இந்தியா. சரி அக்கௌன்ட் ஓபன் பண்ணலாம்னு பண்ணா ஆறு மாசத்துக்கு ஒரு முறை மெசேஜ் சர்வீசுக்கு  காசு. சரின்னு விட்டா... வருஷத்துக்கு ஒருமுறை அக்கவுண்ட் மெயின்டனன்ஸ் காசு... அது சரி போய் ஏட...

புத்தரின் ஆசை

Image
 ஆசையே துன்பத்திற்கு வழி என்ற புத்தருக்கே ஒரு ஆசை இருந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா?? ஆம் . புத்தருக்கு பிடித்த பழம் எதுவென்று தெரியுமா ?? உடனே எல்லாருக்கும் புத்தா ஃப்ரூட் தான் ஞாபகம் வந்திருக்கும். இதோ இங்கே கீழே காட்டப்பட்டுள்ள படம்.  ஆனால் இது அல்ல... இந்தியாவிர்க்கு பெயர் போன மாம்பழம் இன்று சீனா வரை சென்று இருக்கிறது என்றால் காரணம் புத்தரின் சீடர்கள். புத்தருக்கு பிடித்த மாம்பழங்களை அவருக்காக நாடு கடந்து எடுத்துச் சென்றனர் என  சில வரைபடங்களும் , புத்தர் அரசமரத்தடியில் மட்டுமல்லாமல் அவ்வப்போது மாமரம் அடியிலும் இருப்பதாக சில சாட்சிகள் கிடைத்திருக்கின்றன.  எல்லாத்தையும் துறந்த புத்தருக்கு கூட பிடித்த பழம் இந்த மாம்பழம்.  இதை எனக்கு  கூறிய விகடன் இதழுக்கு என் நன்றிகள். நன்றி.  வாசிப்போம் சுவாசம் உள்ளவரை

காலங்கள் கடக்கிறது

Image
 இன்று நான் பார்த்து வியந்த ஒரு விளம்பரத்தை தான் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.  கேட்பரி டைரி மில்க் சாக்லேட் ( Caudbery Dairy milk) விளம்பரம்  1993 வெளிவந்தது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. நான் பார்த்து வியந்து மகிழ்ந்து விளம்பரம் என்று சொல்லலாம். 90ஸ் கிட்ஸ் எனப்படும் சிலருக்கு இந்த விளம்பரம் பரிச்சயமானது தான். பெண்கள் இப்படித்தான் உட்காரவேண்டும் , சிரிக்க வேண்டும் விளையாட வேண்டும் என்று சொல்லிப் பழகிவிட்டோம் நம் சமுதாயத்திற்கு இந்த விளம்பரம் சவுக்கடியாக இருந்தது. தன் காதலன் மட்டைபந்து வீரர். ஒரு மிட்டாயை எடுத்துக்கொண்டு ஸ்டேடியத்தில் செல்கிறாள் காதலி. அனைவரையும் தாண்டி தன் காதலன் வென்று விட்டதை எண்ணி உலகம் மறந்து அந்த ஸ்டேடியத்தில் உற்சாகமாக தன் சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறாள்.  இந்த விளம்பரத்தை காணும் அனைவருக்கும் தன்னை மறந்து ஒரு புன்னகை பூக்கும். அதுவே இன் விளம்பரத்தின் வெற்றி.  அதே விளம்பரத்தை  மீண்டும் 2021ல் பெண்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு வெளியிட்டுள்ளது.  பெண் மட்டைபந்து வீரர்களை உற்சாக படுத...

NEET - பாடம்

Image
 இப்பொழுது பெருதும் பரபரப்பாகவும் அரசியலாகவும் மாறிவிட்ட Neet பற்றி தான் இன்று பதிவிட போகிறேன். வீட்டிற்கு வீடு மரம் வளர்ப்போம் என்பது  போய் இன்று வீட்டுக்கு வீடு மருத்துவர்கள் (டாக்டர்) வளர்க தொடங்கிவிட்ட சமுதாயமாக மாறிக் கொண்டிருக்கிறோம். ஒரு மருத்துவரின் முக்கிய குணமே மனவலிமை தான். (என்ட்ரன்ஸ் )நுழைவுத்தேர்வில் எங்கே தோற்று விடுவோமோ என்று பயந்து.. கொஞ்சம் கூட மனதளவில் தைரியம் இல்லாத பல மருத்துவர்களை தான் இந்த நீட் கொன்றருக்கிறது.  இதில் யாரை குறை சொல்வது? சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வழிமாறி தன் வாழ்வே முடிந்துவிட்டது என்று தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களையா?  இல்லை டாக்டர் படித்தால்தன் உன் வாழ்வு சிறக்கும் என்று ஊட்டி வளர்த்த பெற்றோர்களையா?  ஏய் நீ நன்றாகப் படிக்கிறாய் எதற்காக ஆர்ட்ஸ் குரூப் எடுக்கவேண்டும் டாக்டருக்கு படி என்று நம்பிக்கை தரும் ஆசான்களையா?  இல்லை சிறு குழந்தையை பார்த்ததுமே என்ன ஆகப் போகிறாய், டாக்டரா? இன்ஜினியரா? போலீஸா?  என்று கேட்க பழகிவிட்ட நம் சமுதாயத்தையா?  எனக்கும் பதில் தெரியவில்லை. ஆனால் என்றாவது ஒருநாள் இதை நாம் புரிந...