Posts

Showing posts from July, 2020

நண்பர்கள் தினம்!!

Image
வாசிப்பவர்களுக்கு வணக்கங்கள், இன்று நண்பர்கள் தினமாம். நாமும் நம் கருத்துக்களை பதிவிட வேண்டும் அல்லவா?? நம் அனைவருக்கும் பள்ளிப்பருவ நண்பர்கள் தினம் கொண்டாடியது ஞாபகம் இருக்கும் கலர் கலராய் கயிறுகளைக் கொண்டு நம் கைகளை அழகாக்கும் நண்பர்கள்.   யார் கையில் அதிகம் கயிர் இருக்கிறதோ அவர்களுக்கு அதிக நண்பர்கள் என்று பெருமையோடு நடைபோட்ட காலமெல்லாம் சென்றது. இன்று மனம் விட்டு பேச அருகில் யாருமில்லை. காயத்தை துடைத்து கட்டியணைக்க யாருமில்லை. வெறுமையின் சென்றபோதெல்லாம் நண்பர்களின் ஞாபகம் மட்டுமே விருந்து வைத்தது. நினைவில் இருந்தவர்கள்... இன்று நிஜத்தில் இல்லை... ஏனோ இந்த தினத்தில் மட்டும் நான் உனது வாட்ஸ்அப் எண்னை பதிவிட்டிருக்கிறேன் என்று  ஞாபகப்படுத்த குறுஞ்செய்திகளை தட்டுகின்றன சிலர். அதுவும் ஃபார்வர்டு மெசேஜ்களால்(Forward Message) நம்மை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைவு படுத்துகிறார்களாம். அன்பு நண்பர்களே, நட்பு என்பது ஒரு நாளில் மட்டும் நினைத்துக் கொள்வதில்லை. சோகம் வரும்போது கொஞ்சம் நேசம் காட்டுங்கள். அன்பிற்கு ஏங்கும் நேரத்தில் அனைத்து கொள்ளு...

நினைவுகள் என்றுமே நிரந்தரம்.

Image
நினைத்து வாழ்வது ஒரு வரம் தான் அல்லவா?? என்றுமே நாம் இப்போது எவ்வளவு மகிழ்கின்றோம் என்பதைக் காட்டிலும் சென்றதை எண்ணி தான் அதிகம் மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்.  இன்று என் பதிவும்... நான் கடந்து வந்த ஒரு அழகிய நினைவுக்கு என் வார்த்தைகளை வேண்டி எழுதுகிறேன்.  நான் பிறந்து சில வருடங்கள் கழித்து என் அப்பா முதல் முதலாய் ஒரு மோட்டார் வாங்கினார். அது இன்றும் எங்கள் வீட்டில் ஓர் ஓரமாக நின்று எங்களை மகிழ்வித்து கொண்டிருக்கின்றது. இன்று சிறிது நேரம் அதை பார்த்துக்கொண்டு இருக்கையில் தோன்றியது தான் இவைகள்.  அந்த மோட்டாரில் அப்பா வருவதென்றால் அவர் வருவதற்கு முன்னரே அந்த வண்டி சப்தம் எங்களை எச்சரிக்கைச் செய்யும்.  முதன்முதலில் மோட்டாரில் ஏற கற்றுக் கொண்டு, என் அரியாசனமாக இருந்தது அந்த மோட்டார் இன்ஜின் தான்.  இன்றும் நினைவிருக்கிறது பள்ளிக்கு அப்பாவுடன் இந்த மோட்டாரில் நான் செல்லும் போது எவ்வளவு பெருமிதம் கொண்டேன் என்று. அப்பாவின் தோள் பிடித்து அவருக்குப்பின் அமர்ந்து செல்லும் ஒவ்வொரு பயணமும் எனக்கு பரிசுத் தான். இன்று பல வருடங்களுக்கு பின் என் தம்பிக்காக அந்த மோட்டாரை சிறி...

அறிவியல் அறிவோம்!!

Image
நாம் அன்றாட வாழ்வில் ஆபரணங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும் அறிவியல் உண்மைகளை இன்று அறிவோமா?? முதலில் ஏன் நாம் மோதிரம் போட்டுக் கொண்டிருக்கிறோம்??  வெளி நாட்டுமக்கள் மோதிரம் அணிந்துதான் திருமணம் செய்து கொள்வார்கள் அதற்கான அறிவியல் உண்மையை அறிவீர்களா?? மோதிர விரலில் எப்பொழுதும் சிறிது அழுத்தம் இருந்தால் செக்ஸுவல் ஹார்மோன் சீராக இருக்குமாம். கழுத்து வங்கி அதாவது நெக்லஸ் என சொல்லப்படும் அந்த ஆபரணம் அணிவதன் மூலம் உங்கள் கழுத்திக்கும் உடலுக்கும் உள்ள ரத்த ஓட்டம் சீராக அமையுமாம். நெற்றிச்சுட்டி அணிவதன் மூலம் உங்களுக்கு தலைவலி, சைனஸ் ப்ராப்ளம்  வராதாம். பிறந்தவுடனே காது குத்தும் வழக்கம் கொண்டவர்கள் நாம். காரணம் காது நரம்புகளில்  சிறிது அழுத்தம் இருந்தால் நமக்கு அறிவாற்றல் அதிகமாகுமாம். வளையல் அணியும் போது கைகளில் ரத்த ஓட்டம் சீராகுமாம்.  மூக்குத்தி அணியும்போது பெருங்குடலும் சிறுகுடலும் எந்த ஆபத்தும் வராமல் நோய்களெல்லாம் குணமாகுமாம். கொலுசு அணிவதன் மூலம் கல்லீரல் மண்ணீரல் கர்ப்பப்பை என அனைத்திற்கும் பாதுகாப்பு தரும். இன்று திருமணம் ஆன உடனே மூன்று  ம...

நான் நானாக இருக்கிறேனே?? தயவுசெய்து??

Image
வாசிப்பவர்களே,      இன்று என் எழுத்துக்களை நம்பி அல்ல...  என் உணர்ச்சிகளை நம்பி இதை எழுதுகிறேன்.      பெண்ணை பெண்ணாக இருக்க விடுங்களேன்.  ஒரு பெண்ணாக பிறந்து IAS, IPS ஆகிவிட்டார் .முதன் முதலில் ஒரு பெண் ஆட்டோ டிரைவர்கள் என்று எங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிற நீங்கள் தான் எங்களை பெண்பால் விகுதி போட்டு இழிவு படுத்துகிறீர்கள் .      பெண் என்றால் ஒரு வீட்டுக்கு பொக்கிஷமாம். சிலருக்கு அது செல்வமாம். பலருக்கு அது மரியாதை.... நாங்களும் உயிருள்ள பொருள்  என்று அறியாதது ஏன்??      அழகுக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் நாங்கள் படைக்கப்படவில்லையே?? எங்களை வர்ணித்து தேவதைகளாகுவதும் நீங்கள்தான்...   வில்லியாக  காட்சிப்படுத்தும் நீங்கள்தான்.       எங்களை ரசித்து பாடுவதும் நீங்கள் தான் எங்கள் இராட்சசி ஆக்குவதும் நீங்கள்தான்.  அது எப்படி உங்களால் நேசித்த ஒருவரை இவ்வளவு இழிவாக பேச முடிகிறது??      அன்பை எதிர்பார்க்கும் எங்களிடம் ஆளுமை காட்டுவது சரியா??  ...

நான் காதலிக்கிறேன்

Image
இன்று எனக்கு மிகவும் பிடித்த அந்த நபரை பற்றி தான் செல்ல போகிறேன்.  தினம் நான் நினைத்து இயங்கும்  அந்த  நபரை.... சற்ற  ஆவலாக இருக்கிறீர்களா?? இதோ...... நீ பூசிக்கொள்ளும் மஞ்சளால் என் புலன்கள் சிதறுகிறது... என்னை பார்த்ததும் உனக்கு அவ்வளவு வெக்கமா?? கன்னம் சிவக்கிறாய்?? பார்த்ததுமே கட்டி இழுக்கிறாய்.. நாளும் சுண்டி இழுக்கும் உன் வசீகர வாசம்... பார்த்ததுமே உன்மேல் பாயத் தோன்றுகிறதே... உன் பெயரை சொன்னாலே சப்புக்கொட்டுகிறது என்பது உதடு... நினைக்கும்போதே என் நாட்களில் நிறைந்து விடுகின்ற நீ... எனக்காக வாடி வதங்கும் போதெல்லாம் என் மணக்கொம்பின் உச்சியில் நிற்கின்றாய். உன்னை அழகாக்கிக் கொள்ள இன்னும் எத்தனை ஆடைகளைத்தான் சுட்டிக் கொள்வாய் நீ ?? தனித்து இருந்தாலும் அழகானவள் தான் நீ... உனக்கு இத்தனை ஆபரணங்கள் தேவையா?? நீ வாடி வதங்கி என்னை வாட்டி எடுக்கிறார்.. உன்னை கையிலேந்தும் அந்த தருணம் நான் உலகத்தையே வென்ற பூரணம்... உன் ருசிக்கு தமிழில் வார்த்தைகள் இல்லையா?? என் பசிக்கு உன்னை விட பெரிய மருந்து இருக்கிறதா?? ஒற்றை தீண்டல் போதும் என் ஒட்டு மொத்த தூக்கமும் பறந்த...

கொஞ்ச நேரம் கிடைக்குமா ??

Image
வாசிப்பாளர்ளே...      இந்தப் பதிவு உங்களை நீங்களே வாசிக்க.      உங்களை சுற்றி  ஏராளமான அழகான விஷயங்கள் உள்ளன.    💓  காலையில் எழுப்பும் தேநீர் வாசம்.    💓  ஜன்னலை திறந்ததும் வசந்தம் வீசும்.     💓 புரண்டு படுக்க கட்டிலின் சத்தம்.     💓 அடம்பிடித்து அப்பாவிடம் வாங்கிய நோட்டு வாசம்.    💓  எப்போதுமே சண்டக்கோழியாய் சகோதரா நேசம்.    💓  இதழ் சுவைக்கும் கண்களுக்கும் விருந்து வைக்கும் பச்சை மாங்காய்.      💓 கறிக்கொழம்பு மேல் இருக்கும் தேங்காய்.     💓 அடிப்பதைத் தவிர வேறு எதுவும் அறியாக் குழந்தை.      💓 நம் வீட்டு குப்பையில் (அதாவது நமது ரூம் அதான் சொன்னேன்) குப்பையில் சரி செய்யும் போது கிடைக்கும் புதையல்கள்.      💓குடும்பத்தலைவி ஆனபோதிலும் எருமை என்று அழைக்கும் நண்பன்.     💓சட்டையைத் திருடி போடும் சகோதரன்.      💓சாக்லேட் உடன் சண்டை போடு சகோதரி.    ...

நீ தான் பேரழகு !!

Image
இங்கே நாம் பலரும் தொலைத்ததை தேடுவதை விட தொலைந்தவர்களையே தேடுகிறோம்.      இன்னும் எத்தனை நாள் உனக்கு பிடித்தவர்களுக்கு ஏற்பது போல் உன்னை மாற்றி கொண்டிருப்பாய்??                          நீ....  நீயாய் இருப்பதே பேரழகு என மறவாதே!!      தவறு என்று தெரிந்தால் தைரியமாக கேள்.     சரியில்லை என்று தோன்றினால் சட்டென்று விலகு     பெருந்தன்மை எனும் பெயரில்     உன் சுயமரியாதையை இழக்காதே.      உன் காரணத்தை தேடுபவர்களுக்கு....      உன் காதல் தேவை இல்லை.      உன் வாழ்வில் கடைசி வரை உன்னோடு பயணிப்பது நீ மட்டுமே!! எந்த உறவாயினும்  உன்னோடு உறுதுணையாக வேணால் இருக்கலாம்.  ஆனால் உன்னோடு பயணிப்பது நீ ஒருவன்தான். மறவாதே!! Picture Courtesy : Nandhini. S அன்புக்காக ஏங்கும் என் அப்பாவிகளே..... உன்னை நீயே நேசிக்காத போது பிறரை எப்படி நேசிப்பார்கள்?? உன்னோடு உற்ற நண்பனாக நீயே இரு. உன்னோடு முதல் எத...

தமிழ் சினிமாவின் தெரியாத உண்மைகள்!!

Image
வாசிப்பவர்களுக்கு வணக்கம், இதோ!!  இன்றும் ஒரு புதிய தகவல்.       சேக்ஸ்பியர் (Shakespeare ) எழுதிய  ட்வெல்ஃப்த் நைட் (Twelfth Night ) எனும் நாடகம் 1601  வெளியிடப்பட்டது.  இந்த நாடகத்தை தழுவி 1949 ஆம் ஆண்டு கன்னியின் காதலி என்ற திரைப்படம் வெளிவந்தது.        இந்த ட்வெல்ஃப்த் நைட் கதையில் செபாஸ்டியன்,  வயோலா என்ற இரு சகோதர சகோதிர்களை மையமாக கொண்டது.  இருவரும் கடல் சீற்றத்தினால் படகு உடைக்கப்பட்டு வெவ்வேறு பக்கம் கரை சேர்கின்றன.   வயோலா தான் ஒரு பெண் என்பதை உலகிற்கு மறைத்து ஒரு அரசனுக்கு சபாஷியன் என்ற பெயரில் பணிபுரிவாள். இறுதியில் சகோதர சகோதிரள்கள் இணைவதே கதை.       கன்னியின் காதலி கதையில் ஆதித்யன்,  சந்திரிகா என அண்ணன் தங்கை இருவரும் கடல் சீற்றத்தினால்  வெவ்வேறு பக்கம் கரை சேருகின்றனர்.  சந்திரிக்கா என்பவள் கலைமணி எனும் ஆண் பெயரிட்டு அங்கே இருக்கும் அரசருக்கு பணிபுரிகிறாள்.                      ...

ஆபாசகார்களுக்கு மட்டும் இது!!

Image
     இன்னைக்கு என்ன எழுதலாம்-ன்னு  யோசிக்கும்போது நேற்று இன்ஸ்டாகிராமில் ஒரு நேரலை நிகழ்ச்சியில் எனது மாணவி தான் தொகுப்பாளர் என்பதால் சற்று ஆவலுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அவள் நிகழ்ச்சியின் விருந்தாளர், பத்தாவது படித்து முடித்த ஒரு குட்டி தேவதை.  அவர்கள் இருவரின் உரையாடலில் நான் மகிழ்ந்து இருந்தபோது கீழே சில ஆபாச அழைப்புகளை(comments) கண்டேன்.      கர்ப்பம் சுமக்கும் மட்டும் பெண்களை கைகுலுக்கி வரவேற்கும் சமுதாயமே!! எங்களை வெறும் காமத்திற்காக மட்டுமே பார்ப்பது ஏன் ??      பெண்களை ஆபாசமாக பார்க்கும் போதெல்லாம் உன் கூட அக்கா தங்கச்சி பொறக்கல??  உனக்கு அம்மா இல்லை ?? என்று பேசுவது கூட தவறுதான் ஏனென்றால் அவர்களுக்கு கூட உன்னிடம் பாதுகாப்பு இல்லை.       இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பரபரப்பு செய்தி. 60வயது  நிறைந்த  பெண்மணியை எவனோ ஒருவன் பாலியல் தொல்லை செய்தானாம். 6 மாதத்தில் தொடங்கி 60 வயது வரை அவர்கள் உடை உங்களை அழைக்கிறது அப்படிதானே??      என் உடலை நேசிக்கும்...

சில்லறை சிறைச்சாலை!!

Image
     சில சில்லறைகளை  சம்பாதித்து விட்டால் சந்தோஷம் வரும் என நம்பும் என் தோழமைகளே!!      ஒரு  நிமிடம் யோசியுங்கள் ......      கோடி கோடியாய் பணம் இருந்தும் கேட்பார் இல்லாமல் இறந்து போனவர்கள் ஏராளம் .  பல சினிமா பிரபலங்கள் கூட இதில்  பிரதிபலிக்க தான் செய்கின்றன.      பணம்,  செல்வாக்கு என அனைத்தும் இருந்தும் அனாதையாய் தான் இறந்துவிடுகின்றனர்.  நாட்டை ஆண்டவர்கள் முதல் நடித்து களைத்துப் போனவர்கள் வரை இதில் உள்ளடக்கம்.      என் மானிடமே!!      நாணயங்கள் தொலைந்து போதிலும் நண்பர்கள் இருப்பார்கள். கோடிகள் தொலைந்தபோதும்  குடும்பம் உன்னை குணப்படுத்தும் என அறிக!!(சம்மாரிப்பதால் மட்டுமே மதிப்பு என ஏமாந்து போகாதீர்கள்.) Picture Courtesy : Nandhini.S      கையளவு காசு இருப்பவனே கனமில்லாத மனிதனாய் மகிழ்ந்து வாழலாம்.  சம்பாதித்து விட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று போராடுபவர்களே...  சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ சிரிப்பதும் அவ்வளவு முக்கியம் த...

தனிமையே தீராதே!!

Image
தனிமை இங்கே பலருக்கும் கொடுமைதான். ஏனோ அப்பாவிகளுக்கு தெரிவதில்லை அது ஒரு அமிர்தம் என்று..... மனிதமே !! நன்றாக யோசி ஒவ்வொருமுறை நீ தனிமையை தழுவும் போதெல்லாம்  உன் நீயே புதுப்பிக்கவில்லையா? அவளுடன் மணிக்கணக்கில் பேசி பேசியே இன்று முழு மனிதனாக பூத்துயிருக்கிறாய் மறவாதே!! Picture Courtesy : Nandhini.S தனிமையில் இருப்பது வேறு ... தனித்திருப்பது வேறு.. .      தனித்து இருக்காதே ஆனால் சற்று தனிமையிலேயே இரு. எத்தனை பேரிடம் எவ்வளவு முறை  புலம்பினாலும் கடைசியில் உன் மன ஆறுதல் மட்டுமே உனக்கு நிரந்தரம். அதற்கு எதற்காக மற்றவரிடம் மன்றாட வேண்டும்??  சிந்தித்துப்பார் தோழமையே!!      உன் தேடலுக்கு பதில் சொல்ல தனிமையால் மட்டுமே முடியும்.      அரக்கப்பரக்க ஓடும் இந்த ஆடம்பர வாழ்க்கையில் அழகான ஒரே விஷயம் உன்னோடு நீ சற்று நேரம் செலவிடுவது தான்.      உன்னையே நீ புரிந்து கொள்ள தனிமை தேவைப்படுகிறது.       தொலைபேசியை தொலைத்துவிட்டு சற்று உங்களோடு உறவாடி பாருங்கள். உன் உணர்வே உன்னை ஊக்கவிக்கும்   வா...

நிறங்களின் நிஜங்கள்.........

Image
     கருப்பா இருந்தாலும் கலையா தான் இருக்கிற என்ற வார்த்தையை ஒருமுறையேனும் உங்கள் வாழ்வில் நீங்கள் கேட்டிருப்பீர்கள் இல்லை சொல்லி இருப்பீர்கள் அல்லவா ?? ? அப்படியானால் நீங்களும் அவர்கள் தான்.      கண்ணா கருமை நிறக் கண்ணா முதல் கருப்புதான் எனக்கு புடிச்ச கலர் தாண்டி கருப்பு பேரழகா காலத்திற்கு வந்து விட்டபோதிலும் கருப்பு ஏனோ சிலருக்கு வெறுப்பாகத்தான் இருக்கின்றது.      கருப்பு என கிளியோபட்ரா- வை நகைக்கும் கும்பல்களே அவளின் சரித்திரம் அரிந்துவிட்டு வா. நிறங்கள் நம்மை வேறுபடுத்திக் காட்டவே தவிர வேற்றுமையை காட்ட அல்ல... புரிந்துகொள் மானிடா...  விமர்சனங்களே  வாழ்க்கையின் கதவு என்று நம்புகிறார்கள் நான் எனினும்.                                                                என் தோல்விகளை விமர்சனம் செய்யுங்கள். என் தோள்களை அல்ல!! என் கனவுகளை விம...

இந்த பாட்ட அது??

Image
வசிப்பவர்களுக்கு வணக்கங்கள் .      ஆங்கிலத்தின் ஆணிவேராக திகழும் ஷேக்ஸ்பியர் ஒற்றைக் கவிதை ஒரு பாடலாக உருவெடுத்திருக்கிறது.  இதில் நம் பலருக்கு தெரியாது அதை தான் என்று நான் எழுதி இருக்கிறேன்.      அங்காடி தெரு படத்தில், விஜய் ஆண்டனி இசையில் , நா .முத்துக்குமார் அவர்களின் வரியில் சேக்ஸ்பியரின் 130 சானட் (Sonnet)  சாயல் பிரதிபலிப்பே காணப்படும். பார்க்கலாமா?? இதோ.... My mistress' eyes are nothing like the sun;Coral is far more red than her lips' red ;If snow be white, why then her breasts are dun ;If hairs be wires, black wires grow on her head.I have seen roses damask'd, red and white,But no such roses see I in her cheeks; And in some perfumes is there more delight Than in the breath that from my mistress reeks. I love to hear her speak, yet well I know That music hath a far more pleasing sound;I grant I never saw a goddess go;My mistress, when she walks, treads on the ground: And yet, by heaven, I think my love as rare As any she belied with fal...

ஆடி ஒன்னு அப்படின்னா???

Image
       நம்ம எல்லாருக்குமே தெரியும் ஆடி ஒன்னு சொன்னாலே சின்ன வயசுல எப்படா வீட்டுக்கு போவோம்-ன்னு பள்ளியில்  ஆசையாய் காத்திட்டு இருப்போம் இல்லையா??        காரணம் தேங்காய் சுட்டு அதை உண்பதற்காக மட்டும் அல்ல அதை  செய்வதற்காகவும் தானே??  பள்ளி முடிந்து வீடு வந்ததும் அந்த தங்க தேங்காயை நெருப்போடு  குளிக்க வைத்து, உன் தேங்காயில் விரிசல் என சக நண்பகர்களோடு சண்டையிட்டு ஒருவர் தேங்காயை ஒருவர் உடைத்து உண்ணும் சுகமே....  அடடா...  எச்சில் ஊரும்!!      ஆடி ஒன்னு எதனால கொண்டாடப்பட வேண்டிய விஷயம்??  என்பதை அறிந்து கொள்ள வேண்டும் .      பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில் பாண்டவர்களுடன் சேர்ந்து கண்ணன் ஒரு சூழ்ச்சி செய்கிறான். ஆடி-யின் முதல் அமாவாசை அன்று பலி  கொடுப்பவனே போரில் வெற்றி பெறுவார் என்று சகாதேவன் கூறிகிறான்.  அதனால் கௌரவர்களுக்கும் முன்பாக நாம் பலியிட வேண்டுமென்று அர்ஜுனனின் மகனான அரவாணை பலியிட பாண்டவர்கள் முடிவு செய்கின்றனர்.      நான் என்ன...

அழுகையை அழைப்பாயா ??

Image
     அழுகையை அழைப்பாயா ? அழுகை அவமானமல்ல... அழுகையும் அழகுதான்!! அழுவதினால் பயனை சொல்கிறேன்,  அசந்து போவாய்!! ❤அழுவதினால் மனது அமைதி பெறும். ❤விழி  நீரினால் வலி குறையும். ❤மனம் உடைந்து அழுவதால் மன அழுத்தம் தீரும். ❤தண்ணீரின் வழியே கிருமிகள் செத்துப் போகும் . ❤கண்ணீர் கசிந்தால் கண்களும் நன்றாக தெரியுமாம்.                                                                            Picture Courtesy : Nandhini.S அழுவது வீழ்ச்சியல்ல  சில நேரங்களில் அவசியம்தான்.      இங்கே பலர் இருவது வயதிலேயே இறந்துவிடுகின்றனர் ஆனால் எழுவது வயதில் தான் புதைக்கப்படுகின்றன.      வாரம் ஒருமுறை வந்து போகும் விடுமுறை என நாம் அழுதுவம் நன்மையே!!        தோன்றும் போது எல்லாம் அழுதுவிடு என் செல்வமே!! கண்ண...

இந்த காதல் வேறு!!

Image
     கல்யாணத்தில் முடிவது காதல் அல்ல.. காலம் கடந்தும் கை கோர்த்து செல்வது காதல்.      காமம் தீர்ந்ததும் காதல் முடிந்து விடும் இந்த காலத்தில்,  கண்களால் கவிதை எழுதி...  பார்வையால் பாசைகள் பேசி....  வாழ்நாள் முழுவதும் காவியம் படைக்க கற்று கொள்ளுங்கள்.       கோவம்  வரும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் கட்டிக் கொள்ளுங்கள்!! முரண்பாடுகள் தோன்றும் போதெல்லாம் முத்தமிட்டுக் கொள்ளுங்கள்!!.      வாழ்க்கையில் ஒரு நிமிடக்காதல் கிடைப்பதே வரம் அக்காதலையே கரம்பிடிப்பது என்பது பாக்கியம். கல்யாணத்திற்கு முன் காதல் செய்பவர்களே... கல்யாணத்திற்க்கு பிறகு காதலிக்க கூடாதா என்ன??      பெரிய பரிசு தேடி...  ஒருவரை ஒருவர் பகிர்ந்து மகிழ்ச்சி பெற கூட தேவையில்லை ....  அவ்வப்போது  காதல் பார்வை மாற்றிக்கொள்ளுங்கள்.        வாய்மொழியில் உரையாடுவதை விட விழிமொழியின் உறவாடி பாருங்கள் .  உங்களைப் பற்றி உங்களைவிட இன்னொருவர் புரிந்து கொள்வது வரம்.  நீங்கள் அனைவரும் பாக்கியவான...