பொங்கல் வாழ்த்துக்கள்
அனைத்து நாட்களிலும் விழாவாக கொண்டாடும் தனித்துவம் கொண்டது நம் தமிழரின் பண்பாடு. " போக்கி" என்பதன் சொல் மருவி "போகி" என்றானது. அதாவது பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகி. அக்காலத்தில் தமிழர் திருநாள் அதாவது தை 1 அன்று அறுவடை செய்வதாக கருதப்படுகிறது. அந்நாளில் புது நெல் மற்றும் தானியங்கள் வீட்டில் கொண்டுவந்து சேர்க்கப்படும். அச்சமயத்தில் போகி அன்று வீட்டை சுத்தம் செய்து பழைய தானியங்கள் எல்லாம் அப்புறப்படுத்தி புதியதை வரவேற்கும் முறையாக கொண்டாடப்பட்டது தான் இந்த போகி பண்டிகை. நாட்கள் செல்ல செல்ல பழையன எரித்து புதியன வாங்கவேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டோம் . ஆனால் இன்று இருக்கும் காலகட்டத்தில் போகியை வேறுவிதமாகவும் கொண்டாடலாம். பழைய கசப்பான அனுபவங்களையும், காயங்களையும் மறந்து நம்மை நாமே மன்னித்து அதை ஏற்றுக்கொண்டு, மறுக்காமல் அடுத்த வருடம் தமிழர் திருநாள் தொடங்கும் அன்று புதிதாக பிறந்து... சென்ற வருடம் செய்த தவறையும் சென்ற வருடம் அடைந்த துயரத்தையும் அனுபவிக்காத அளவு சரியான முறையில் வாழ்க்கை நடத்த போகி அன்று நம் கஷ்டங்களை எல்லாம் போக்கும் விதமாக...