Posts

Showing posts from September, 2022

அட யார்ரா இவள்???

Image
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் பாரதியார்.  பாவம் !  அவர் ஒரு ஆண் என்பதால் பெண்கள் படும் இன்னல்களை புரிந்து கொள்ளவில்லை.  ஒல்லியாக இருந்தால், உடல் சற்று பருமனாக இருந்தால், சற்று மாநிறம் ஆக இருந்தால், உயரம் கொஞ்சம் கம்மியாக இருந்தால், அதே உயரம் சற்று அதிகமாக இருந்தால், நடந்தால், சிரித்தால், பேசினால் என்று எது சொன்னாலும் அவளைக் கைகாட்ட ஒரு ஆள்காட்டி விரல் சூழ்ந்து கொண்டு இருக்கிறது.  பிறப்பிலிருந்து அவள் பெற்றோர்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்கிறாள் .  சற்று வளர்ந்த பின்னே கணவருக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்று வடிவமைக்கப்படுகிறாள். குழந்தை பெற்ற பின் குழந்தைகளுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள். இதற்கு இடையே அவ்வப்போது சின்ன சின்ன சுதந்திரங்களை அவள் பெற்று அதுவே நம் வாழ்வை நகர்த்தி செல்லும் திரவ சக்தியாக தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறாள்.  உலகில் 94 சதவீதம் பெண்கள் பாடி ஷேமிங் எனப்படும் பெரும் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இது அவர்களாக தங்கள் உடம்பை நேசிக்க இயலாமல் அல்ல....  பிற அன்னிய சக்திகளால் அடுத்தவர்களுக...