கொடிய விஷம்
வாசிப்பாளர்களுக்கு வணக்கம் எ பாய்சன் டிரி ( A Poison Tree) என்ற ஒரு கவிதையை இன்று தான் படித்தேன். வில்லியம் பிளேக் என்பவரால் இது அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எனக்கு எப்படி இது சரியான நேரத்தில் என் பார்வை சிக்கியபடி உங்களில் சிலருக்கும் இது பயன்படலாம் என்று இங்கு பகிர்கிறேன். உலகிலேயே மிகக் கொடிய விஷம் எது என்று இந்த கவிதை நமக்கு அறிய வைக்கும் . தனது முதலாவது வரியில் என் நண்பரோடு நான் கோபமாக இருந்தேன். அதை அவரிடம் வெளிப்படுத்தினேன் ஆகையால் அது அத்தோடு நின்று விட்டது என்றும் தனது மூன்றாவது வரியில் நான் என் எதிரியுடன் கோபமாக இருந்தேன். ஆனால் நான் அதை அவனிடம் சொல்லவில்லை. ஆகையால் அந்த கோபம் எனக்குள் அதிகமாக வளர்ந்தது என்றும் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். அடுத்து நான் அந்த கோபத்திற்கு தினமும் பயத்தால்... தண்ணீர் விட்டு வளர்த்தும் இரவும் பகலுமாய் கண்ணீர் விட்டு அழுதும் வெயிலில் சிரித்துக்கொண்டே வளர்த்தேன். எனக்குள் நானே அன்பாக ஏமாற்றி பேசி அதை வளர்த்துக் கொண்டேன் அதனால் திடீரென்று ஒரு நாள் எதிர்பாராமல் அந்த கோபம் என்ற மரத்தில் சிவப்பாக அழகான ஒரு ஆப்பிள் ...