இதுதான் வேண்டுமா
உண்மையில் இதுதான் வேண்டுமா?? பெண்ணென்றால் ... பொறுமை, அன்பு, நிதானம், விட்டுக் கொடுத்து போதல், தன்னையே தியாகம் செய்து பிறருக்காக வாழ்வது என்று பல கற்பனை உருவங்களை... விருப்பம் இருக்கிறதோ இல்லையோ அவளுக்கு திணித்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தில் பிறந்து இருக்கிறோம். உண்மையில் ஒரு பெண் இதைத்தான் வேண்டும் என்கின்றாளா?? தன்னையே தியாகம் செய்து வாழ்கின்ற ஒவ்வொரு பெண்ணும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்களா?? அவள் தனக்கென ஒரு நாள் கூட வாழ்ந்ததில்லை என்று அவள் இறந்த பின்பு சொல்லும் ஒவ்வொரு வயதான கணவரும் அதைக் கேட்க அவள் இல்லையே.. அவள் இருக்கும் போதே சொல்லிவிடலாம் என்று ஏன் சொல்லத் தோன்றவில்லை?? Pc: Herstory இருக்கும் வரை மதிப்பதே இல்லை. இதைத்தான் ஒரு பெண் வேண்டும் என்கின்றாளா? தன் சுயமரியாதையை விட்டுவிட்டு, சுக துக்கங்களை விட்டுவிட்டு, பிறருக்காக வாழ நினைக்கும் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் எத்தனையோ சொல்ல முடியாத சோகங்கள் இருக்கின்றன. ஆனால் வெளியில...