ஊடலில் காதல்
வாசிப்பவர்களுக்கு வணக்கம்... வாய்மொழியால் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும் சில நேசத்தின் இருப்பு அந்த உறவுகளுக்கு தெரியுமே... பிறருக்கு பாசக்காரி ஆனாலும் நமக்கு மட்டும் ஏனோ கோவக்காரி. அடுத்தவர்களுக்கு அவள் அடக்கம் ஆனவள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அவள் அடங்காப்பிடாரியாய். சில உறவுகளில் ஏனோ தராசு வைத்து அன்பு காட்டுவதில்லை. இவ்வுலகில் ஒன்று கூட இன்னொன்று குறைய இருப்பது தான் மிகச் சரியான அளவில் கலந்து பருகும் காதல் பானம். அடிக்கடி கோபித்துக் கொள்ளும் அழகிய உறவுகள் கிடைப்பதெல்லாம் அரிது தானே. கோவமாய் இருக்கிற பொழுதும் நான் கோபமாகத்தான் இருக்கிறேன் என்று நிமிடம் ஒரு முறை நிரூபித்து காத்துக் கொண்டிருக்கும் உறவுகள் அழகியலில் சேர்க்கப்பட வேண்டும். நெருக்கமானவர்களின் கோபம் நாம் கொஞ்சம் கொஞ்சி பேசும் வார்த்தையில் கெஞ்சும் அந்த நொடியில் காணாமல் போய்விடாதா?? பேசியே சிக்கலில் விளைவிக்கவும்.... பேசாமல் சிக்கலை வர வைக்கும் கொண்ட திரவ சக்தி. எப்பேர்பட்ட கோபமும் இரண்டு கொஞ்சலில் முடிந்து விடும். ஆசை வார்த்தைக்கு அசைந்து போகாத மனம் உண்டா? ...