தொலைந்தது நீயா??

 வாசகர்களுக்கு வணக்கம்,

 காலையில் அரக்க பறக்க எழுந்து... உண்ணும் உண்ணாமல் வேலைக்கு சென்று...  இரவு தூங்குவதற்காக மட்டுமே வீடு திரும்பி ...

எதற்காக இந்த வாழ்க்கை??  எல்லாம் வயிற்றில் புலப்பிற்கு என்று சொல்லிக் கொண்டாலும்... அந்த வயிற்றுக்கு சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த இயந்திர உலகத்தில் சற்று அமைதியாக உட்கார்ந்து சிந்தித்துப் பாருங்கள். இது நீதானா ?? இந்த வாழ்க்கையை தான் நீ வாழ ஆசைப்பட்டாயா?   

அன்று அன்னியர் யாரோ ஒருவர் என்னுடன் வீட்டுக்கு வந்து விடுகிறாயா? உனக்கு நிறைய சாப்பிட தருகிறேன் என  சொல்லும் போது அந்த வீட்டை விட்டு அவர்கள் பின்னாலே நம்பிக்கையுடன் பயணிக்க துணிந்த நாம்....  இன்று உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், நீ மட்டும் போதும் . நீயே என் உலகம். என யாராவது சொன்னால் கூட ஏன் நம்ப மறுக்கிறது இந்த மனம்??

                              Pc: Peakpx


திடீரென்று யாராவது ஒருவர் பாசமாக பேசினால் ... எதற்காக என்று ஏன் இந்த புத்தி யோசிக்கிறது??  சம்பந்தம் இல்லாமல் ஒருவர் நம் மீது அக்கறை காட்டினால் அந்த அக்கரைக்கு பின் இருக்கும் நோக்கம் என்னவஎன்னவென்று ஏன் ஆராய தோன்றுகிறது ?? 

என்னை தனியா விட்டு விட்டு போகாதீங்கம்மா.... பயமாயிருக்கும் என்று என்று சொன்ன நமக்கு, இன்று என்னை கொஞ்சம் தனியா விடுறியா ?? என்னும் சொல்லும் அளவிற்கு எந்த சந்தர்ப்பம் நம்மளை இப்படி தள்ளி இருக்கிறது??? 

எல்லோரும் வேண்டுமென்று நினைத்தவர் தானே நாம்?? இன்று எனக்கு நானே போதும் என்று சொல்லும் அளவிற்கு வாழ்க்கை தலைகீழாக மாறும் என்று என்றாவது சிந்தித்து இருக்கிறோமா?? 

ஊருக்கு மத்தியில் கௌரவமாக தலையை நிமிர்த்துக்கொண்டு வாழ்ந்தாலும் ...  அவரவர் தலையணைக்கு மட்டுமே தெரியும் அது எத்தனை கண்ணீரை தாங்கிக் கொண்டிருக்கிறது என்று. 

 நாம் எங்கே தொலைந்து போனோம்??? 

அன்று திரையில் யாரோ அழுதால் கூட அழுகை பொத்திக்கொண்டு வருமே.... இன்று நம் வாழ்வில் அத்தனை நடந்தும் சிறு கண்ணீர் துளியை வெளியே காட்டிக் கொள்ளாமல் கற்சீப்புக்குள் சேகரித்துக் கொண்டு செல்கிறோமே .... இது நாம் தானா ??எங்கே தொலைந்தது அந்த வாழ்க்கை ??

நிறைய இடங்களில் ஏமாந்து... சோர்ந்து... உடைந்து.... அழுது...  திரும்பி யாராவது ஒருவர் கைதூக்கி விட மாட்டாரா.... யாராவது ஒருவர் கட்டி அணைத்து... இது  சரியாகிவிடும் என்று சொல்ல மாட்டாரா... என்று ஏங்கிய மனது தானே ???

அந்த வழியில் நாம் நம்மை எங்கேயாவது தொலைத்திருப்போமா???

 ஆனால் இன்று கூட யாராவது ஒருவர் நம் கையை இறுக்க பற்றி கொண்டு நம்மை முழுவதுமாக எந்த விமர்சனமும் இன்றி நம்மை அப்படியாக ஏற்றுக் கொள்ளும் ஒரு உறவு ....ஒரு நட்பு.... கிடைக்குமாயின்....  இவ் வாழ்க்கையில் அதைவிட வேறு ஏதாவது பொக்கிஷம் உண்டா ???

இந்த பறந்து விரிந்த உலகில் பாசத்திற்காக ஏங்கும் நாம்தான் இவ்வளவு நீண்ட பயணத்தில் நம்மை நாமே எங்கோ தொலைத்திருக்கிறோம்.... 

அந்த கள்ள கபடமற்ற சிரிப்பு.... 

யார் எது சொன்னாலும் நம்புகின்ற மனது... 

நம்பிக்கையை மட்டுமே நடை போட்டுக்கொண்டு ....

அன்பை மட்டுமே அள்ளி வீசிக்கொண்டு....

சிரிப்பை மட்டுமே சிந்திக் கொண்டு....

சென்ற  அந்த வழியில்....

 எத்தனை கற்கள்....

 எத்தனை ஏற்ற இறக்கங்கள்....

 எத்தனை விமர்சனங்கள்....

 எத்தனை ஏமாற்றம் ....

எத்தனை அழுகை ....

இதையெல்லாம் தாண்டி வருவதற்குள் நம்மை நாமே தொலைத்து விட்டோமா???

 அப்படி தொலைந்து போகாமல் இருக்க கடவுள் யாராவது ஒருவரை நம் வாழ்வில் அனுப்பியிருப்பாரா? 

அவர் ஒருவரிடம் மட்டுமே நாம் நாமாக இருக்க முடியுமா? 

 அப்படி ஒருவர் உங்கள் வாழ்வில் கிடைக்குமாயின் இழந்து விடாதீர்கள்.

அத்தனை இன்ப துன்பங்களுக்கும் தலையசைத்துக் கொண்டு, தன் கண்ணீரை பூட்டிக்கொண்டு உங்கள் பின் நிற்கும் அந்த ஒருவரை இழந்து விடாதீர்கள்!

நீங்கள் தொலைந்த பாதையில் புதையல் கிடைத்தால் உங்களை கண்டுபிடிக்க ஓர் வாய்ப்பு....  இல்லையேல் புதிய பாதையில் ஓர் வாழ்க்கை!

வாசிப்போம் சுவாசம் உள்ள வரை...

நன்றி! 

Comments

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...