ஊடலில் காதல்

 வாசிப்பவர்களுக்கு வணக்கம்...

 வாய்மொழியால் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும் சில நேசத்தின் இருப்பு அந்த உறவுகளுக்கு தெரியுமே...

பிறருக்கு பாசக்காரி ஆனாலும் நமக்கு மட்டும் ஏனோ கோவக்காரி.

அடுத்தவர்களுக்கு அவள் அடக்கம் ஆனவள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அவள் அடங்காப்பிடாரியாய். 

 சில உறவுகளில் ஏனோ தராசு வைத்து அன்பு காட்டுவதில்லை. இவ்வுலகில் ஒன்று கூட இன்னொன்று குறைய இருப்பது தான் மிகச் சரியான அளவில் கலந்து பருகும் காதல் பானம்.

அடிக்கடி கோபித்துக் கொள்ளும் அழகிய உறவுகள் கிடைப்பதெல்லாம் அரிது தானே.

கோவமாய் இருக்கிற பொழுதும் நான் கோபமாகத்தான் இருக்கிறேன் என்று நிமிடம் ஒரு முறை நிரூபித்து காத்துக் கொண்டிருக்கும் உறவுகள் அழகியலில் சேர்க்கப்பட வேண்டும்.

நெருக்கமானவர்களின் கோபம் நாம் கொஞ்சம் கொஞ்சி பேசும் வார்த்தையில் கெஞ்சும் அந்த நொடியில் காணாமல் போய்விடாதா??

பேசியே சிக்கலில் விளைவிக்கவும்....  பேசாமல் சிக்கலை வர வைக்கும் கொண்ட திரவ சக்தி.

எப்பேர்பட்ட கோபமும் இரண்டு கொஞ்சலில் முடிந்து விடும். 

ஆசை வார்த்தைக்கு அசைந்து போகாத மனம் உண்டா? 


                            PC: Getty images 

அன்பிற்கு அடங்காத குணம் உண்டா?

சமாதானத்திற்காகவே சில சண்டைகள் தொடங்கப்படலாம் அல்லவா??

சில உறவுகளின் மென்மையால் இன்னும் மூச்சை பிடித்துக் கொண்டு உயிர் வாழ்கிறது சிறு உறவுகள்.

ஆத்திரப்படுபவர்களை அரை நொடியில் அடங்கி போக வைத்து விடும் ஆசை மொழிகள்.

சமாதானத்திற்கான மெனக்கெடும் உறவுகள் இருக்கும் வரையில் மனிதத்தின் மனம் எங்க பூத்துக் கொண்டுதான் இருக்கும்.

ஊடலுக்குப் பின் வரும் கூடலே உலகில் சிறந்த காதல் மொழி என்று சொல்லலாம்.

கூடியே வாழ்வதில் என்ன இருக்கிறது??  ஊடலுக்கு பின் கூடல் வருமே அதுவல்லவா சொர்க்கம்??

ஆகையால்... 

வெறுப்பவரையும் நேசிப்போம்.

அன்பை பகிர்வோம்....

 அன்பை மட்டுமே பகிர்வோம்....

 வாசித்ததற்கு நன்றி! 




Comments

  1. அருமை❤️

    ReplyDelete
  2. மனம் என்ன நினைக்கிறதோ அதை தான் நாம் உணர்கிறோம் அதுபோல உங்களுடைய வார்த்தைகள் மிக அழகாக இருந்தது .. மகிழ்ச்சி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

சில நேரங்களில்... சில மனிதர்கள்...