Posts

Showing posts from August, 2020

இது உங்களுக்காக தான்

Image
 என் நலன் விரும்பிகளே ... இந்த பதிவு உங்களுக்காகத்தான்!! எனக்கு தெரியும்.. கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும்!  கல்யாணம் நம் வாழ்வில் முன்னேற்றுவதற்கான முதல் படி!  ஆனந்தத்தின் அடிப்படை திருமணம் ! ஆசையின் ஆணிவேர் திருமணம்!  வாழ்க்கையை முழுமை திருமணம் ! என்னால் புரிந்துகொள்ள முடிகிறது... வாழ்நாள் முழுவதும் துவண்ட போது தாங்கும் அவன்.. கண்ணீர் சிந்தும் போதெல்லாம் தோள் கொடுக்கும் அவன்.. எதற்கு வாழ்கின்றோம் என்று தோன்றும் போதெல்லாம் பிள்ளைகளின் முகம்... வாழ்க்கையின் நிறைவை நிறைவேற்றும் திருமணம்!!  எல்லாம் சரிதான். .. எனக்கு ஒரு உண்மையை மட்டும் சொல்லுங்க. திருமணம் செய்து பத்து நாட்கள் கூட தாண்டிடாமல் எனக்கு உடனே அழைத்து தயவுசெய்து திருமணம் மட்டும் செய்து கொள்ளாதே! இப்பொழுதே சந்தோஷமாக இருந்து கொள் என்று அறிவுரை கூறும் நண்பர்களே.... பிறகு நீங்களே வயசாயிடுச்சு கல்யாணம் எப்போ என்று கூச்சமே இல்லாமல் கேட்கிறீர்கள்.  நான் எதை செய்யவேண்டும்  இப்போ??  வருடத்திற்கு 1.36 மில்லியன் மக்கள் இந்தியாவில் மட்டும் விவாகரத்து செய்து கொள்கிறார்களாம் .திருமணம் ஆகியும் ...

இது தான் சொர்கம்!!

Image
இக்கரைக்கு அக்கரை பச்சை தான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எங்கள் பள்ளிப் பருவம் என்று நினைத்தாலும் ஒரு சுகம்தான்.  இறைவா !! அட்சயபாத்திரமாக நினைக்க நினைக்க அந்த ஞாபகங்கள் நிறைந்து நிறைந்து வழிகின்றது . இந்த சின்ன இதயம் அவ்வளவு பெரிய நினைவையும்  அதன் சந்தோஷத்தை தாங்க இயலுமா ?? இந்த புத்தகச்சுமை இன்று இனிமையாக மாறும் என்று எதிர்பார்கவில்லையே...... இக்காலத்தில் ஜீரோ பாயிண்ட் (0.5,0.7) எத்தனை பென்சில்கள் வந்தாலும் அந்த மொக்குகளை ஒவ்வொன்றும் மாற்றி மாற்றி அமைத்துக்கொண்டு எழுதிய எங்களது காலம்.....     அப்பா அந்த ரப்பர் வைத்த பென்சில் தான் எனக்கு வேண்டும் என்று அடம் பிடித்த காலம்.... அப்சரா பென்சில்காக அழுது புரண்ட காலம்...    சிக்கனத்தை நாங்கள் சிறுவயதிலேயே செய்திருக்கிறோம்.... ஒரு பென்சிலை சுண்டு விரலுக்கும்  குறைந்தாலும் அதை தூக்கி எறிய மனமில்லாமல் எத்தனையோ பென்சில்களை சேகரித்த நாட்கள்.... அந்த ஹீரோ பேனாவை வைத்து இருக்கிறவனை அந்தத் வகுப்பில் ஹீரோவாக திகழ்வான்....    குளிர்பானம் பாட்டில்களை நாங்கள் தண்ணீர் நிரப்பிக் கொண்ட காலத்தில் ஒருசி...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி

Image
ஸ்மார்ட் கிளாஸ் , ஆன்லைன் கிளாஸ், மூன்று மொழி கல்வி என புதுப்புது திட்டங்களை நம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் புதுமை படுத்திக் கொண்டிருக்கும் இந்த நாட்களில்தான் புதுசு புதுசாக கோச்சிங் சென்டர் உருவெடுத்து விருட்சமாய் நிற்கின்றது.  ஒரு லட்ச ரூபாய் கொடுத்து அந்த மாநிலத்திலேயே சிறந்த பள்ளிகளில் சேர்த்துவிட்டது உடன் நம் நின்றுவிடாமல் காலையிலிருந்து மாலை வரை அந்த பிஞ்சுகளை நக்கி எடுத்த பின் வீட்டிற்கு திரும்பி அம்மா என்று அணைத்துக் கொள்ளாமல் டுசனுக்கு அனுப்பி அவர்களை கொலை செய்து கொண்டிருக்கின்றோம்.  பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் காலை முதல் மாலை வரை சொல்லிக் கொடுக்காத அந்தப் பாடத்தை டுஷங்களுக்கு சென்றால் சிறந்த மதிப்பெண் எடுக்கலாம் என்று உங்களுக்கு யார் தான் சொல்லிக் கொடுத்தது ?? அப்படி டுஷங்களுக்கு சென்றால் தான் மதிப்பு மதிப்பெண்கள் எடுக்கலாம் என்றால் எதற்கு கல்விக்கூடங்களும் கல்லூரிகளும்??  போட்டித் தேர்வுகளில் யார் அதிகம் அறிந்திருக்கிறார்கள் என்பதை தாண்டி இப்பொழுது உங்களுக்காகவே பல பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்  சாமி .... கல...

அந்த நாட்கள்

Image
 அந்த நாட்கள் மிகவும் இனிமையானது தான் ....  அறியா வயதில் .... அளவில்லாத ஆனந்தம் !!  குட்டி போட தெரியாத அந்த  மயிலிறகுக்கு  தினமும் சோறு போட்டு நெஞ்சோடு கட்டி உறங்கிய அந்த நாட்கள் சுகமானவை . கழுகு ஒன்று பறந்தால் கூட பெருமாகழுகு   என்று பின்னே ஓடிய நாட்கள் சந்தோசத்தை  துரத்தி சென்ற நாட்கள். கட்டிப்பிடித்தால் குழந்தை பிறக்கும் என்று கள்ளம் கபடம் இல்லாத அந்தப் பருவம்.  ஆசை மிட்டாய்க்கு ஆசைப்படாதவர் இருக்க முடியுமா??  நினைக்கும் போதே எச்சில் ஊறுகிறதா? ?  தொலைக்காட்சி விளம்பர ங் கள் எல்லாம் நேரலை என்று நம்பிய நாட்கள் . ஒரே கதாநாயகி விளம்பரங்களில் வேறு வேடத்திலும், விளம்பரம் முடிந்தபின் படத்தில் வேறு வேடத்திலும் வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்ட கடைசி தலைமுறை நாம்தான்.  அணிலை பார்த்தால் நல்லது நடக்குமாம். முட்டிக்கொண்டால் கொம்பு முளைக்குமாம்.  ஒரு அண்டங்காக்கை பார்த்தால் அன்று நாளை இருண்டுவிடுமாம்.  மழையும் வெயிலும் ஒன்றாக பொழிந்தால் கழுதைக்கும் ஓநாய்க்கும் கல்யாணமாம்.  சக்திமானை நம்பியர் நம்பிய கடைசி  சந்ததியினர் நாம்தான்....

சுதந்திர தினம் வாழ்த்துக்கள் !!

Image
  வெள்ளையனை வெளியேற்றிவிட்டு வெளிநாட்டு கம்பெனிகளில் அடிமையாய் இருக்கும் அனைவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துக்கள். உரிமைக்காகப் பாடுபட்ட நாட்கள் சென்று இன்று ஊறுகாய்கள் சண்டை போடும் டாஸ்மார்க்  .... இல்லை இல்லை மது பான பிரியர்களுக்கு என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.   உரிமைக் குரலுக்கு பதிலாக இன்று ஏதேதோ உளறிக்கொண்டு இருக்கிற ஊடகங்களுக்கு   என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.   பேச்சுரிமை என்ற பெயரில் தினமும் குறைந்தது நான்கு மனிதரையும் காயப்படுத்தும் நம் நாக்கிற்கு என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.    பெண்களை சீரழித்த பின்னும்  நம்முன் உல்லாசமாய் சுற்றித்திரிய வைத்த இந்த ஜனநாயக நாட்டிற்கு என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.   கழுத்து நிறைய தங்கம் போட்டு நடுஇரவில் தைரியமாக செல்லும் நாள் அன்று சுதந்திரம் கிடைத்து விட்டது என்று கொண்டாடுங்கள் என்றார் காந்தி .  இன்று கழுத்து நிறைய தங்க வேண்டாம் பெண் என்று சென்றாலே போதும் அவள் வீடு திரும்புவதில்லை....  அப்படிப்பட்ட நம் நாட்டில் வாழ்பவர்களுக்கும் என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.  ...

தனிமை தவறேல் !!

Image
வாழ்க்கையில்  எப்பொழுதும் நாம் யாரோ ஒருவரின் அன்புக்காக ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். பிறந்த தருவாயில் அம்மாவின் அன்புக்காக, வளரும் தருவாயில் தகப்பனின் அன்புக்காக, ஓடிய தருவாயில் நண்பனின் நம்பிக்கைக்காக, சிறகடித்த நாட்களில் காதலின் அன்புக்காக, வருத்தத்தின் நாட்களில் மனைவியின் அன்புக்காக, பிள்ளை, பேரன் என்று யாரோ ஒருவர் என் பாசத்திற்க்காக ஆயுள் முழுவதும் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் அந்த அன்பு நிரந்தரமாக யாருக்குமே கிடைப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.கிடைத்ததையும் சிலர் தக்க வைக்கவில்லை என்பது இன்னொரு வகையான உண்மைதான்.   இவை அனைத்தையும் தாண்டி யாரும் கற்பித்த பாடத்தை தனிமை பல முறை கற்பித்துக் கொண்டு தான் இருக்கின்றது.  ஒரு நாளில் ஒரு முறையேனும் உன்னோடு நீ உறவாடிக் கொள் என்கிறார் சுவாமி விவேகானந்தர் இல்லையெனில் வாழ்க்கையின் சிறந்த மனிதரோடு உரையாடுவதை நீ இழந்துவிடுவாயாம்.    இந்தக் லாக்டோன்  நம் பலரிடம் பல மாற்றங்கள் நிரப்பி இருக்கிறது. காரணம் ஏதோ ஒரு காரணத்திற்காக ஓடிக்கொண்டு இருந்த  நாம் சற்று இளைப்பாறி நம்முள் ஒளித்து...

இனி இத மட்டும் சொல்லாதீங்க.....

Image
 அன்று முதல் இன்றுவரை படிப்பு வரவில்லை என்றால் ஆடு மாடு தான் மேக்கணும் என்று பிள்ளைகளை திட்டி வளர்த்தது போதும்.  ஆடு மாடுகளை மேய்ப்பது அவ்வளவு இழிவான செயலா?? வீதிக்கு வீதி பள்ளிகளும் கல்லூரிகளும் அதில் படிப்பவர்களும் ஏராளமாய் விட்டனர். ஆனால் படித்தவனுக்கு வேலைதான் எங்கே?? முட்டிமோதி ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின்னும் போக்குவரத்து செலவிற்கு பத்தாமல் போகும் சம்பளம் தான் இங்கே மிச்சம்.   படித்துவிட்டு விவசாயம் செய்ய வேண்டுமா?? படித்தவன் ஆடு மேய்க்கலாமா?? படித்தவன் தறி ஓட்டுவதா??  அவன் இது செய்கிறதா?? அது செய்யவேண்டுமா?? என்று ஒவ்வொரு முறையும் படிப்பின் அகங்காரத்தை தலையில் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் அல்லாடுகிற முட்டாள் மனிதர்கள்தான் நாம்!!  படிப்பு என்பது அறிவை வளர்ப்பதற்கு தானே தவிர அது ஒன்றும் ஆடம்பரம் அல்ல. ஒரு டீ மாஸ்டர் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான். படித்து கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் நான் அவனை விட குறைவாகதான் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றேன்.  இங்கே எனக்குத் தெரிந்த பலர் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலு...

சில நேரங்களில்... சில மனிதர்கள்...

Image
வாசிப்பவர்களுக்கு வணக்கம்,  சில நேரங்களில்... சில மனிதர்கள்... நம்மை காயப்படுத்தினாலும் சிலர் தானாக மருந்தாக அமைகின்றன.  எதிர்பாராது நேரத்தில் எதிர்பாராத மனிதர்களின் உரையாடல் ... எதிர்பார்க்காத அளவிற்கு சந்தோஷத்தை கொடுத்துவிடும்.. அது போல தான் இன்று என் தோழியிடம் உரையாடியதில் எனக்கு கிடைத்தது.  பலமுறை சண்டையிட்டு இருக்கிறோம் ஏன் பல மாதங்கள் பேசாமல் கூட இருந்திருக்கிறாம்... ஆனால் இன்று பேசிய போது எங்களுக்குள் விட்டு போன அந்த ஆறு மாதமும் அரை நொடியில் இல்லாமல் போனது.  என் வாழ்வில் குறுகிய நண்பர் வட்டாரத்தில்  அவளும் ஒருவளே. எப்போதும் என் தோளுக்கு பின்னே நின்றே அவள் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பாள். இன்றும் என் தோளுக்கு பின் அவள் என்னை தடவிக்கொடுப்பதை தவறாமல் செய்து கொண்டிருக்கிறாள்.  நாட்கள் மாறினாலும் சில நட்புகள் மாறுவதில்லை.  காலம் கடந்த பின்னும் சில காதல்கள் கலைவதில்லை.  நேரம் ஓடிய பின்னும் சில நெருக்கங்கள் குறைவதில்லை.  என் ஈரச்சிரிப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் அவள் நியாபகம். . ..  நான் வாடிய நேரத்தில் கைகொடுக்கும் அவள் வார்த்தைகள்......

என்ன வாழ்க்கைடா இது??

Image
வாசிப்பவர்களுக்கு வணக்கம்,      என்ன வாழ்க்கைடா இது?? என்று நாம் புலம்பிக் கொண்டே இருக்கும் தேசிய கீதம் இதுதான் அல்லவா??      நம்மை சுற்றி ஆயிரம் அற்புதங்கள் இருந்தும் ஒரு அற்ப ஆசைக்காக நம் சந்தோஷம் அனைத்தையும் தொலைத்துவிட்டு புழம்பிக் கொண்டிருக்கும் உங்களில் ஒருவர் தான் நானும்.      ஆனால் நமக்கு தெரியாமல் நம்மை சுற்றி ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு பொருளும் நமக்குப் பாடம் புகட்டி கொண்டுதான் இருக்கின்றது. இந்த கொரானாவின் கொடுங்க நேரத்தில் கூட நம் தலைக்கு மேலே ஒரு கூரையும் தட்டில் தினமும் சோறும் இருக்கிறதே என்று நான் சந்தோஷப் பட்டுக் கொள்ளாமல்,  மன அழுத்தத்தில் ஒவ்வொருவரும் மனதிற்குள் அழுது கொண்டிருக்கின்றோம்.  ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் ஒரு புறம்  இருக்க.... எல்லாம் இருந்தும் வாழ்க்கையே வெறுத்து ஏங்கும் இன்னொரு புறம். இந்த காக்கையின் வீடியோவை ஒரு நிமிடம் பாருங்கள். இதை விடவா நம் வாழ்வில் கஷ்டப்பட்டு இருக்கிறோம்?? (This video may not in clarity but the message does. Watch!!)      நேற்று நான...