சுதந்திர தினம் வாழ்த்துக்கள் !!
வெள்ளையனை வெளியேற்றிவிட்டு வெளிநாட்டு கம்பெனிகளில் அடிமையாய் இருக்கும் அனைவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
உரிமைக்காகப் பாடுபட்ட நாட்கள் சென்று இன்று
ஊறுகாய்கள் சண்டை போடும் டாஸ்மார்க் .... இல்லை இல்லை மது
பான பிரியர்களுக்கு என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
உரிமைக் குரலுக்கு பதிலாக இன்று ஏதேதோ
உளறிக்கொண்டு இருக்கிற ஊடகங்களுக்கு என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
பேச்சுரிமை என்ற பெயரில் தினமும் குறைந்தது நான்கு மனிதரையும் காயப்படுத்தும் நம் நாக்கிற்கு என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
பெண்களை சீரழித்த பின்னும்
நம்முன் உல்லாசமாய் சுற்றித்திரிய வைத்த இந்த ஜனநாயக நாட்டிற்கு
என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
கழுத்து
நிறைய தங்கம் போட்டு நடுஇரவில் தைரியமாக செல்லும் நாள் அன்று சுதந்திரம் கிடைத்து விட்டது என்று கொண்டாடுங்கள் என்றார் காந்தி .
இன்று கழுத்து நிறைய தங்க வேண்டாம் பெண் என்று சென்றாலே போதும் அவள் வீடு
திரும்புவதில்லை.... அப்படிப்பட்ட நம் நாட்டில் வாழ்பவர்களுக்கும்
என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ஒரு பெண் தனியாக இருந்தால் அவளை தவறாக பார்க்கலாம் என்று சுதந்திரம்
கொடுத்த நம் நாட்டிற்கு என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
குட் ஹாபிட்ஸ் (Good Habit) பேட் ஹாபிட்(Bad Habit )
என்று சொல்லித் தந்த காலம் போய் குட் டச் (Good Touch )பேட் டச் (Bad Touch )என்ற நவீன
முன்னேற்றத்திற்கு வந்த நம் நாகரீகத்திற்கு என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ப்ரைவசி எனும் பெயரில் தினமும் நம்
அலைபேசியை ஆயிரம் பேர் எட்டிப்பார்த்து செல்கின்ற இந்த வலைத்தள
நாகரிகத்திற்கு என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ஜாதி ,மதம், இனம், மொழி, வெள்ளை,
கருப்பு, ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், நெட்டை, குட்டை, ஒல்லி, பருமன் என
நம்மை நாமே பிரித்துக்கொண்டு வாழும் நமக்கு என் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ஜாதி இல்லையடி பாப்பா!!
என்ற நம் நாட்டில் ஜாதி சான்றிதழ் கேட்டு தொல்லை செய்யும் என் கல்வி
நிறுவனங்களுக்கு என் சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
நம் நாட்டின்
வளங்களை விற்றீர்கள், அரசாங்க வேலையை விற்றீர்கள் பொறுத்துக் கொண்டோம்.
இன்று அரசாங்கத்தையே விற்க துணிந்து விட்டீர்கள் பொறுத்துக் கொள்கிறோம்.
ஏனென்றால் இது சுதந்திர நாடு அல்லவா??
சுதந்திரத்தை கொண்டாடும் என் சகோதர
சகோதரிகளே உங்கள் அனைவருக்கும்..... இந்த சுதந்திர நாட்டில்.....
என் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
நன்றி.
வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

Let's praise with action, instead of just words.. Congrats Anu
ReplyDeleteTrue words da
ReplyDelete