எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி
ஸ்மார்ட் கிளாஸ் , ஆன்லைன் கிளாஸ், மூன்று மொழி கல்வி என புதுப்புது திட்டங்களை நம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் புதுமை படுத்திக் கொண்டிருக்கும் இந்த நாட்களில்தான் புதுசு புதுசாக கோச்சிங் சென்டர் உருவெடுத்து விருட்சமாய் நிற்கின்றது.
ஒரு லட்ச ரூபாய் கொடுத்து அந்த மாநிலத்திலேயே சிறந்த பள்ளிகளில் சேர்த்துவிட்டது உடன் நம் நின்றுவிடாமல் காலையிலிருந்து மாலை வரை அந்த பிஞ்சுகளை நக்கி எடுத்த பின் வீட்டிற்கு திரும்பி அம்மா என்று அணைத்துக் கொள்ளாமல் டுசனுக்கு அனுப்பி அவர்களை கொலை செய்து கொண்டிருக்கின்றோம்.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் காலை முதல் மாலை வரை சொல்லிக் கொடுக்காத அந்தப் பாடத்தை டுஷங்களுக்கு சென்றால் சிறந்த மதிப்பெண் எடுக்கலாம் என்று உங்களுக்கு யார் தான் சொல்லிக் கொடுத்தது ?? அப்படி டுஷங்களுக்கு சென்றால் தான் மதிப்பு மதிப்பெண்கள் எடுக்கலாம் என்றால் எதற்கு கல்விக்கூடங்களும் கல்லூரிகளும்??
போட்டித் தேர்வுகளில் யார் அதிகம் அறிந்திருக்கிறார்கள் என்பதை தாண்டி இப்பொழுது உங்களுக்காகவே பல பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி ....
கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சொல்லிக் கொடுக்க முடியாத உனது 20 வருட கல்வி வாழ்க்கையில் வெறும் இரண்டு வருடத்திற்கு கோச்சிங் கிளாசில் சொல்லிக் கொடுக்க முடியுமானால் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் எதற்கு??
எண்ணற்ற கோச்சிங் சென்டர் வீதிக்கு ஒன்று முளைத்துவிட்டது.
எனக்குப் புரியாத ஒரு விஷயம் இதுதான். வெறும் 30% கவர்மெண்ட் உத்தியோகத்திற்கு இத்தனை கோச்சிங் சென்டர் உருவெடுத்து இருப்பதற்கு காரணம் நான் தானே??
கால் காசாயினும் கவர்மெண்ட் காசாக வேண்டும் என்று ஒரு அர்த்தம் இல்லாத வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கும் முட்டாள்கள் நாம்.
ஒரு குடும்பத்தில் நான்கு பேரும் கவர்மெண்ட் உத்தியோகத்திற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற காலக் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
முதுகலைப் பட்டங்களை படிக்க இப்பொழுது யாரும் முன் வருவதில்லை. காரணம் அந்த இரண்டு வருட முதுகலைப் பட்டத்தில் படித்து நான் அறிந்து கொள்வதை காட்டிலும் இரண்டு வருட கோச்சிங் கிளாசில் சேர்ந்து கொண்டால் வேலைக்கு சீக்கிரம் போக்கிவிடலாம் என்ற எண்ணம்தான்.
அரசு வேலையை அணுக இது என குறுக்குவழியா??எனக்கு விளங்கவில்லை
இது எங்கு முடியப்போகிறது??
எப்போது முடியும் என்று தெரியவில்லை.
பார்ப்பவர்கள் அனைவரும் தனியார் உத்தியோகத்திற்கு செல்பவர்களை கவர்மெண்ட் எக்ஸாமுக்கு படி என்று என்று சொல்வதை நிறுத்த போகிறார்களோ ??
என்று இதை புரிந்து அறிந்து வாழப் போகிறோமோ ??
தெரியவில்லை.
உண்மையாகவே எனக்கு இது புரியவில்லை.
வாசிப்போம் சுவாசம் உள்ளவரை


Nice mam
ReplyDeleteThanks
DeleteCorrect mam
ReplyDeleteThanks for reading
DeleteSemaaaa
ReplyDeleteThanks for reading
DeleteUnmaitha...
ReplyDeleteThanks for reading
Deleteஅரசு வேலையில் உள்ள ஆசைதான் அனைத்திற்கும் காரணம்
ReplyDeleteThanks for reading
Delete