அன்னியம்
25 வருடமாக பெற்றெடுத்த பிள்ளையை ஒரு அன்னியனுக்கு திருமணம் செய்து வைத்த பின் தன் கடமை முடிந்தது என உங்களால் எப்படி எண்ண முடிகிறது?? அக்கினியை அவள் வலம் வந்ததும் ஈன்றெடுத்தவரே அந்நியமாய் உங்களால் எப்படி முடிகிறது??? தலை நிமிர்ந்து நட என கூறிய உங்கள் வளர்ப்பு, திருமணமானதும் எதிர்த்துப் பேசாதே என்று சொல்ல உங்களால் எப்படி முடிகிறது??? நேர்கொண்டு பார்வை நிமிர்ந்த நன்னடை என்றெல்லாம் ஊட்டி வளர்த்த உங்களால், கணவன் அடித்தாலும் சத்தம் போட்டு கூட அழக்கூடாது என்று சொல்ல உங்களால் எப்படி முடிகிறது??? திருமணம் முடிந்து அவள் உங்கள் வீடு வந்தாள் உங்களால் அவளை விருந்தாளி என எப்படி உங்களால் உபசரிக்க முடிகிறது ??? தன் பிள்ளையை காட்டிலும் மருமகனுக்கு பிடித்ததே சமைக்க வேண்டும் என்று உங்களால் எப்படி எண்ண முடிகிறது??? போகின்ற வீட்டிலும் சரி உங்கள் வீட்டிலும் சரி திருமணத்திற்கு பின் அவள் எங்கு தான் ஓய்வெடுப்பாள்?? குடிப்பழக்கம் தப்பு என்று சொல்லி வளர்த்த நீங்கள் கணவன் என்றால் குடிப்பான் சகித்துக் வாழ கற்றுக்கொள் என்று சொல்ல உங்களால் எப்படி முடிகிறது??? சுய கௌரவம் சொந்த உழைப்பில் ...