மதுபானமும் தண்ணீரும்
வாசிப்பவர்களுக்கு வணக்கம் சிறுவயதிலிருந்து நாம் பணத்தை வீணாக்கினால் நம் வீட்டில் சொல்லும் முதல் வார்த்தை 'தண்ணீரைப் போல காசு செலவழிக்காதே' என்பதுதான். தண்ணீருக்கு அவளது மதிப்பா?? அன்றாட வாழ்வில் தண்ணீர் முக்கியம் என்று சொல்லிக்கொண்டே வீணக்கிகொண்டு தானே இருக்கிறோம்?? இன்று மதுக்கு கொடுக்கும் முக்கியம் தண்ணீர்க்கு கொடுப்பதில்லையே..... ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 45 லிட்டர் தண்ணீரை வீணாக்குகிறோம் என்று ஆராயிச்சி சொல்கிறது. ஆஸ்திரேலியா வில், நான்கு லிட்டர் ஒயின் $17 க்கும்( இந்திய மதிப்பெண்ணில் 1245 ரூபாய் / 4 liter ), 350ml தண்ணீர் $2.50 க்கு( இந்திய மதிப்பெண்ணில் 184 ரூபாய் /350ml ) விற்பதாக சொல்கிறது ஆராயிச்சி. 2015 ஆம் ஆண்டில் ஒயின் விலை $0.82 (Rs.60) என்றும் அதே தண்ணீரின் விலை $2.50(Rs.183) என்றும் ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. தண்ணீருக்கு அவ்வளவு மதிப்பு அங்கே!! வியட்நா...