நினைவுகள் என்றுமே நிரந்தரம்.


நினைத்து வாழ்வது ஒரு வரம் தான் அல்லவா??

என்றுமே நாம் இப்போது எவ்வளவு மகிழ்கின்றோம் என்பதைக் காட்டிலும் சென்றதை எண்ணி தான் அதிகம் மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 இன்று என் பதிவும்... நான் கடந்து வந்த ஒரு அழகிய நினைவுக்கு என் வார்த்தைகளை வேண்டி எழுதுகிறேன். 

நான் பிறந்து சில வருடங்கள் கழித்து என் அப்பா முதல் முதலாய் ஒரு மோட்டார் வாங்கினார். அது இன்றும் எங்கள் வீட்டில் ஓர் ஓரமாக நின்று எங்களை மகிழ்வித்து கொண்டிருக்கின்றது.



இன்று சிறிது நேரம் அதை பார்த்துக்கொண்டு இருக்கையில் தோன்றியது தான் இவைகள். 

அந்த மோட்டாரில் அப்பா வருவதென்றால் அவர் வருவதற்கு முன்னரே அந்த வண்டி சப்தம் எங்களை எச்சரிக்கைச் செய்யும். 

முதன்முதலில் மோட்டாரில் ஏற கற்றுக் கொண்டு, என் அரியாசனமாக இருந்தது அந்த மோட்டார் இன்ஜின் தான். 

இன்றும் நினைவிருக்கிறது பள்ளிக்கு அப்பாவுடன் இந்த மோட்டாரில் நான் செல்லும் போது எவ்வளவு பெருமிதம் கொண்டேன் என்று.

அப்பாவின் தோள் பிடித்து அவருக்குப்பின் அமர்ந்து செல்லும் ஒவ்வொரு பயணமும் எனக்கு பரிசுத் தான்.

இன்று பல வருடங்களுக்கு பின் என் தம்பிக்காக அந்த மோட்டாரை சிறிது சரி செய்தப் போது மீண்டும் அது என்னை பார்த்து கர்ஜனை செய்தது. எங்கிருந்தோ ஓடிவந்து அணைத்துக்கொண்டது அத்தனை சந்தோஷமும். 

என் அப்பாவிற்கு அடுத்து நான் அதிகம் நேசிக்கும் ஆண் தமயன் தான். முதன்முதலில் மோட்டார் ஓட்டக் கற்றுக்கொண்டு என்னை உட்கார வைத்து அவன் அழைத்து செல்லும்போதும் ஆயிரம் உணர்ச்சிகள் . கீழே எங்கேயாவது விழுந்து விடுவோமா??இவன் இவ்வளவு பெரியவன் ஆகிவிட்டானா?? விளையாடாய் தள்ளி விடுவானோ?? என்று பயந்து ஆவலுடனும் புல்லரிக்க அமர்ந்து முடிந்தது என் முதல் பயணம்.

அப்பாவிற்கு பின் மீண்டும் நான் தோள் சாய்ந்து சென்றது இவனுடன் தான் .என் வாழ்வில் முக்கியமானவர்கள் உடன் பயணம் செய்தது என் நினைவிருக்கும் வரை நிறைந்திருக்கும்.

இவர்கள் இருக்கும் வரை அந்த மோட்டாரும் இருக்கும். அந்த மோட்டாரோடு சேர்ந்து என் நினைவுகளும் அதில் ஒட்டியிருக்கும். 

சில பழைய நினைவுகள் சில நேரங்களில் சர்க்கரைதான். 

எவ்வளவு உண்டாலும் தெகட்டவே இல்லை.

வாசிப்போம் சுவாசம் உள்ள வரை.

Comments

  1. அருமையான வரிகள் 🤩

    ReplyDelete
    Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
  2. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
  3. Words are mesmerized and a blissful impact to me... Lovely words kanmani....😍😍😍😍💜💜💜💜💜💜

    ReplyDelete
    Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
  4. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...