சபாஷ் இந்தியா சபாஷ்

அருமையான அரசியல் -  இந்தியா

என்னடா எடுத்ததும் இப்படி ஆரம்பிக்கிறாளேன்னு  பாக்குறீங்களா??

வேற எப்படி சொல்றது?? 

ஒரு கார் வாங்கணும்னு ரொம்ப ஆசை கஷ்டப்பட்டு பல வருஷம் கழிச்சு ஒரு கார் வாங்கினா. .. 

டயருக்கு...லைட்டுக்கு...இன்ஜினுக்கு.. சீட்டுக்கு ...  தனித்தனியா ஜிஎஸ்டி. சரி ஆசையா முதன்முதலாக வாங்கர காரு. வாங்கியாச்சு. 

பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி. சரி... பரவால்ல ரோடு நல்லா போட்டு இருக்கீங்களா? 

போட்டிருக்கு. டோல்கேட் வோட... ஒவ்வொன்றுக்கும் ஜிஎஸ்டி கட்டி கடைசில பாவம் ஏழை இந்தியாக்கு டோல்கேட்டும் கட்டிவைச்சிருக்குல? 

படிக்கணும்னு ஆசை வச்சிட்டு அதுக்கு காசு கட்ட முடியாம கல்வி கடன் வாங்கரான். அவனுக்கு கல்விக்கு தள்ளுபடி இல்லை. ஆனால் பாவம் பணத்தை ஒளித்து வைக்க முடியாத அளவுக்கு காசு இருப்பவனுக்கு கவர்மெண்ட் தள்ளுபடி செய்யும்.



வாங்குற 5000 சம்பளத்துக்கு அக்கௌன்ட் வேண்டும் என்றது இந்தியா. சரி அக்கௌன்ட் ஓபன் பண்ணலாம்னு பண்ணா ஆறு மாசத்துக்கு ஒரு முறை மெசேஜ் சர்வீசுக்கு  காசு. சரின்னு விட்டா... வருஷத்துக்கு ஒருமுறை அக்கவுண்ட் மெயின்டனன்ஸ் காசு... அது சரி போய் ஏடிஎம்ல அந்த 5000த அப்பப்ப எடுக்கலாம்னு பார்த்தா.... அதற்கும் கெடு வச்சிருக்காங்க ஏடிஎம் மெஷினுக்கு. அதை மீறி எடுத்தால் அபராதம். 

இந்த ஆன்லைன் சமூகம் சும்மா போறவனுக்கு இன்ஸ்டால்மெண்ட்  ஒரு ரூபாய் கொடுத்து வாங்குங்கன்னு கூவி விற்கிறாங்க. 

சாதாரண வாழ்க்கை வாழ்றவனுக்கு ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கலாம்னு கனவு காணச் சொல்லி தராங்க. கடைசியில அவன சாக்கடையை விட ஒரு மோசமான சூழ்நிலையில் கடனாளின்னு தள்ளிவிடறாங்க . 

கடன் வேணும் யாரும் ஆசைப்படுவதில்லை. ஆனால் இந்தியா இதை அறிமுகப்படுத்துது. 

ஐயோ கோச்சுக்காதீங்க. ...நான் எதோ என் மனக்குமுறலை சொன்னேன். நானும் உங்களில் ஒருவள் தான். 

ஜெய்ஹிந்த்

 வாசிப்போம் சுவாசம் உள்ளவரை 

நன்றி

Comments

  1. Oru car vanga nama 1000000 selavu panromna,athu erukkura each parts GST erukku...athoda motha amount la 20 °/° kumala nama barotha katurom

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...