இது உங்களுக்காக தான்
என் நலன் விரும்பிகளே ...
இந்த பதிவு உங்களுக்காகத்தான்!!
எனக்கு தெரியும்..
கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும்!
கல்யாணம் நம் வாழ்வில் முன்னேற்றுவதற்கான முதல் படி!
ஆனந்தத்தின் அடிப்படை திருமணம் !
ஆசையின் ஆணிவேர் திருமணம்!
வாழ்க்கையை முழுமை திருமணம் !
என்னால் புரிந்துகொள்ள முடிகிறது...
வாழ்நாள் முழுவதும் துவண்ட போது தாங்கும் அவன்..
கண்ணீர் சிந்தும் போதெல்லாம் தோள் கொடுக்கும் அவன்..
எதற்கு வாழ்கின்றோம் என்று தோன்றும் போதெல்லாம் பிள்ளைகளின் முகம்...
வாழ்க்கையின் நிறைவை நிறைவேற்றும் திருமணம்!!
எல்லாம் சரிதான். ..
எனக்கு ஒரு உண்மையை மட்டும் சொல்லுங்க. திருமணம் செய்து பத்து நாட்கள் கூட தாண்டிடாமல் எனக்கு உடனே அழைத்து தயவுசெய்து திருமணம் மட்டும் செய்து கொள்ளாதே! இப்பொழுதே சந்தோஷமாக இருந்து கொள் என்று அறிவுரை கூறும் நண்பர்களே.... பிறகு நீங்களே வயசாயிடுச்சு கல்யாணம் எப்போ என்று கூச்சமே இல்லாமல் கேட்கிறீர்கள்.
நான் எதை செய்யவேண்டும் இப்போ??
வருடத்திற்கு 1.36 மில்லியன் மக்கள் இந்தியாவில் மட்டும் விவாகரத்து செய்து கொள்கிறார்களாம் .திருமணம் ஆகியும் நூற்றில் 48% பேர் சந்தோஷமாக இல்லையாம். இன்று நான் கூகுள் செய்து பார்ப்பதே தெரிந்துகொண்டது.
ஒவ்வொரு நீதிமன்றத்திலும் குறைந்தது நான்காயிரம் விவாகரத்து வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்!!
அட அத பரவால்ல விடுங்க. .. திருமணம் ஆயிட்டு நீங்க முதல்ல சந்தோஷமா இருக்கீங்களா? ? (திருமணத்திற்கு முன் எப்படி இருந்தீர்களோ அப்படியே இருக்கிறீர்களா??அதே சுதந்திரம்??அதே சந்தோஷம் இருக்கிறதா??)
எனது திருமணத்தில் ஈடுபாடு காட்டும் நண்பர்களளே... முதலில் உங்கள் திருமண வாழ்க்கையை திருநாளாக மாற்றுங்கள். உங்களுக்குள் சண்டை கொள்ளாமல் சிரித்து மகிழுங்கள்!! பிறகு கேளுங்கள் கல்யாண சோறு எப்ப போடுவேனு....
என் நலன் விரும்பிகளே...
என் சந்தோஷத்தின் தூண்களே..
திருமணம் எனும் நந்தவனத்தில் எனக்கான மாலையும் கிடைக்கும். கிடைக்கும் பொழுது சொல்லி அனுப்புகிறேன். அர்ச்சனையை வீசுங்கள். அதுவரை காத்திருங்கள்.
திருமண விருந்து கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் . பேசும்போதெல்லாம் இந்த கேள்வியை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்களேன்.
நன்றி.
வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

Nice mam
ReplyDeleteThanks keep supporting
DeleteNice mam
ReplyDeleteThanks keep supporting
DeleteOh good
ReplyDeleteThanks keep supporting
DeletePara
ReplyDeleteThanks keep supporting
DeleteThanks keep supporting.
ReplyDeletePerfect shot da❣
ReplyDeleteSapadu ketta oru parcel vangi kuduthrunga😄
ReplyDelete