இது தான் சொர்கம்!!
இக்கரைக்கு அக்கரை பச்சை தான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எங்கள் பள்ளிப் பருவம் என்று நினைத்தாலும் ஒரு சுகம்தான்.
இறைவா !! அட்சயபாத்திரமாக நினைக்க நினைக்க அந்த ஞாபகங்கள் நிறைந்து நிறைந்து
வழிகின்றது . இந்த சின்ன இதயம் அவ்வளவு பெரிய நினைவையும் அதன் சந்தோஷத்தை
தாங்க இயலுமா ?? இந்த புத்தகச்சுமை இன்று இனிமையாக மாறும் என்று எதிர்பார்கவில்லையே......
எத்தனையோ பிஸ்கட்டுகள் வந்தாலும் இந்த பார்லி ஜூ டன் கிளாஸ் தண்ணீரை கிடைத்து விட்டால் போதும் எந்த கல்யாண விருந்து தேவையில்லை எங்களுக்கு.
ஸ்லேட் பென்சில்கலை தின்றி செரிமானம் செய்த நாட்களெல்லாம்....
விவரிக்க வார்த்தைகள் வரவில்லை!!
அந்த நடராஜர் ஜாமென்ட்ரி பாக்ஸ் எதற்கு என்று தெரியாமலேயே அடம்பிடித்து வாங்கியிருக்கிறோம்.
சிக்கனமாய் செலவு செய்வதிலும் மட்டுமல்லாமல் சிக்கனத்தின் மறுஉருவம் திகழ்ந்த அந்த நாட்கள்....ஒரே நொட்டில் ஜந்து பாகங்கள் பிரித்து ஒவ்வொரு பாடத்திற்கும் தனியாக பிரித்தி எழுதிய நாட்கள்....
நேற்று படித்த பாடம் கூட மறந்து விட்டது...
ஆனால் நாம் முதல் முதலில் படித்த இந்தக்கதை மறக்கவே முடியவில்லை. மனதில் பதிந்ததை யாரால் அழிக்க முடியும் ??
குத்தியே செத்து போன இரேசர்கள்...
கலர் கலர் பென்சில்களை சீவி அதன் தூள்களை எல்லாம் வானவில் ஆகிய நாட்கள்...
ஒரு இரேசரில் பேனாவையும் பென்சிலையும் அளிக்க முடியும் என்று நம்பிய நாட்கள்...
இன்று வரை வீட்டில் குடல் பொரித்தால் விரலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் சாப்பிட மனம் வரவில்லை...
உட்கார்ந்த இடத்திலேயே ஆயிரம் விளையாட்டுகள்...
படிக்கும் புத்தகத்தை வைத்து பல ஆயிரம் விளையாட்டுகள் விளையான்ட கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போமா??
90's குழந்தைகள் வரம் வாங்கி வந்தவர்கள் தான்!!
நன்றி.
வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!


















But 2k kids um senjirukom Ellam
ReplyDeleteThen you're too lucky
DeleteEvery lines gives a instant spark of joy .it hypnotized me and took me to the past.
ReplyDeleteIt's my pleasure
DeleteYes truly only for 90s kids...
ReplyDeleteYes!! Thank you for reading
Delete❤️❤️
ReplyDelete😍😍
DeleteSuper dr...golden memories.90's kids are very lucky dr.
ReplyDelete