அந்த நாட்கள்

 அந்த நாட்கள் மிகவும் இனிமையானது தான் ....  அறியா வயதில் .... அளவில்லாத ஆனந்தம் !! 

குட்டி போட தெரியாத அந்த  மயிலிறகுக்கு  தினமும் சோறு போட்டு நெஞ்சோடு கட்டி உறங்கிய அந்த நாட்கள் சுகமானவை .

கழுகு ஒன்று பறந்தால் கூட பெருமாகழுகு  என்று பின்னே ஓடிய நாட்கள் சந்தோசத்தை  துரத்தி சென்ற நாட்கள்.

கட்டிப்பிடித்தால் குழந்தை பிறக்கும் என்று கள்ளம் கபடம் இல்லாத அந்தப் பருவம். 

ஆசை மிட்டாய்க்கு ஆசைப்படாதவர் இருக்க முடியுமா??

 நினைக்கும் போதே எச்சில் ஊறுகிறதா? ? 

தொலைக்காட்சி விளம்பரங்கள் எல்லாம் நேரலை என்று நம்பிய நாட்கள். ஒரே கதாநாயகி விளம்பரங்களில் வேறு வேடத்திலும், விளம்பரம் முடிந்தபின் படத்தில் வேறு வேடத்திலும் வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்ட கடைசி தலைமுறை நாம்தான். 

அணிலை பார்த்தால் நல்லது நடக்குமாம். முட்டிக்கொண்டால் கொம்பு முளைக்குமாம். 

ஒரு அண்டங்காக்கை பார்த்தால் அன்று நாளை இருண்டுவிடுமாம். 

மழையும் வெயிலும் ஒன்றாக பொழிந்தால் கழுதைக்கும் ஓநாய்க்கும் கல்யாணமாம். 

சக்திமானை நம்பியர் நம்பிய கடைசி  சந்ததியினர் நாம்தான். 

அந்த இரண்டு ரூபாய் ஐசுக்கு எந்த சுவை ஈடாக முடியும்? 

இரவு பயணங்களில்  அந்த நிலாவையும் கூட்டிச் சென்ற நாட்களை நினைத்தால் இன்றும் பரவசம் கொள்ளும் மனது. 

விதை ஒன்று முழுங்கிவிட்டால் செடி ஒன்று விருச்சம் பெரும் என்று பயந்த கடைசி கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகள் நாம் தான். 

திங்கள் வந்ததும் அழுதுகொண்டே பள்ளிக்கு செல்வதும், வெள்ளி அன்று மாலையில் குதித்துக் கொண்டே வீட்டுக்கு வருவதும் இன்றும் பசுமரத்தாணியாய் மனதில் நின்று கொண்டுதான் இருக்கிறது. 

புத்தகம் வாங்கியதும் அதற்கு அட்டை போட சொல்லி அடம் பிடித்த கடைசி தலைமுறை நாமாகத்தான் இருக்க முடியும்?? விதவிதமான லேபிள்கள் கொண்டு விளம்பரம் படுத்தி கொண்ட நாட்கள்..... 


அப்பா அந்த நட்ராஜ் ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கி கொடுங்க...என்று அழுததும். 

ஒரே பேனாவில் 5 கலர் மை பேனாவை கொண்டு அலப்பறை செய்ததும்.

பல முறை நம் குத்தி குத்தி செத்துப்போன இரேசர்களும்...

நினைக்க நினைக்க நிரம்பி வழிகிறது உற்சாகம்

எதுவுமே இல்லாத போது மிகவும் சந்தோஷமாக இருந்தோம் .

அனைத்தும் இருந்தும் ஏதோ தொலைத்தது போல் உணர்கிறோம். 

அந்த நாட்கள் ..

அற்புதமானவை!!

நன்றி

வாசிப்போம் சுவாசம் உள்ளவரை


Comments

  1. 🥳🥳🥳😋mam arbuthamana varigal 😍💜

    ReplyDelete
  2. அருமையான பதிவு 😍

    ReplyDelete
  3. Old memories ❤❤❤ unnoda eraser ellam aluthurumnn

    ReplyDelete
    Replies
    1. நன்றி. ஆமா ஆப்ரேஷன் சக்சஸ் 🤣🤣

      Delete
  4. அருமையான பதிவு mam 5 minutes la Alagana memories la neyabagam paduthitinga❣️

    ReplyDelete
  5. Pasama kolathayagava eruthurukqlam...

    ReplyDelete
  6. அருமை பாப்பா... இது மட்டுமா நாம் பார்த்தது, இன்னும் யேராலும். ஆசை மிட்டாயை ஆசையாய் பார்ப்பது... நடராஜ் ஜாமென்ட்ரி பாக்ஸில் சில்லறை சேமித்து வைப்பது... டிப் பென்சில் 0.5, 0.7 டிப் மாற்றங்கள்... நடராஜ் பென்சிலை சீவிய பின்பு அதன் குப்பையை
    சுடு கஞ்சியில் போட்டால் ரப்பராக மாறும் என்று நினைத்தது..இது போன்று பல நினைவுகள் சொல்லிக்கொண்டே போகலாம்... சில நினைவுகளை வெளி கொண்டு வந்த என் தங்கைக்கு நன்றி.... தொடரட்டும்....

    ReplyDelete
  7. மறக்க முடியாத நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்து மகிழ்ச்சி பெற செய்த தங்கள் வரிகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. Super dr.. Childhood memories nyabaga paduthuthu un words..ethuvum ilanalum santhosama iruntha natkal athu..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...