சில நேரங்களில்... சில மனிதர்கள்...

வாசிப்பவர்களுக்கு வணக்கம், 

சில நேரங்களில்...
சில மனிதர்கள்...
நம்மை காயப்படுத்தினாலும் சிலர் தானாக மருந்தாக அமைகின்றன. 

எதிர்பாராது நேரத்தில் எதிர்பாராத மனிதர்களின் உரையாடல் ... எதிர்பார்க்காத அளவிற்கு சந்தோஷத்தை கொடுத்துவிடும்..

அது போல தான் இன்று என் தோழியிடம் உரையாடியதில் எனக்கு கிடைத்தது. 

பலமுறை சண்டையிட்டு இருக்கிறோம் ஏன் பல மாதங்கள் பேசாமல் கூட இருந்திருக்கிறாம்... ஆனால் இன்று பேசிய போது எங்களுக்குள் விட்டு போன அந்த ஆறு மாதமும் அரை நொடியில் இல்லாமல் போனது. 

என் வாழ்வில் குறுகிய நண்பர் வட்டாரத்தில்  அவளும் ஒருவளே. எப்போதும் என் தோளுக்கு பின்னே நின்றே அவள் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பாள். இன்றும் என் தோளுக்கு பின் அவள் என்னை தடவிக்கொடுப்பதை தவறாமல் செய்து கொண்டிருக்கிறாள். 


நாட்கள் மாறினாலும் சில நட்புகள் மாறுவதில்லை. 

காலம் கடந்த பின்னும் சில காதல்கள் கலைவதில்லை. 

நேரம் ஓடிய பின்னும் சில நெருக்கங்கள் குறைவதில்லை. 

என் ஈரச்சிரிப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் அவள் நியாபகம். . .. 

நான் வாடிய நேரத்தில் கைகொடுக்கும் அவள் வார்த்தைகள்... 

என் குழந்தைத் தனத்தில் குதூகலம் ஆகும் அவள் குறும்புகள்.. 

எல்லாம் நினைவுகளில் மட்டுமல்ல....
நிரந்தரமாகவும்...

அவள் வேண்டும்

என்றும் அவள் நட்பில் நான்!! 

வாசிப்போம் சுவாசம் உள்ள வரை. 



Comments

  1. சண்டையிட்டுக் கொண்டாலும் அடுத்த நொடியே சமாதானம் ஆகிவிடும் மனது தான் நட்பு. சில நேரங்களில் மீண்டும் பேசத் தொடங்க சில நாட்களோ ஏன் மாதங்களோ ஆனால் கூட மீண்டும் பேசுகிற தருணம் மறக்க முடியாத தருணம். வாழ்த்துக்கள் அனு.

    ReplyDelete
  2. Nice one... To understand our closed one's affection... Lovely words.... Both of u can never missed each other at anytime....
    Superb Kanmani😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்