தனிமை தவறேல் !!
வாழ்க்கையில் எப்பொழுதும் நாம் யாரோ ஒருவரின் அன்புக்காக ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். பிறந்த தருவாயில் அம்மாவின் அன்புக்காக, வளரும் தருவாயில் தகப்பனின் அன்புக்காக, ஓடிய தருவாயில் நண்பனின் நம்பிக்கைக்காக, சிறகடித்த நாட்களில் காதலின் அன்புக்காக, வருத்தத்தின் நாட்களில் மனைவியின் அன்புக்காக, பிள்ளை, பேரன் என்று யாரோ ஒருவர் என் பாசத்திற்க்காக ஆயுள் முழுவதும் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் அந்த அன்பு நிரந்தரமாக யாருக்குமே கிடைப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.கிடைத்ததையும் சிலர் தக்க வைக்கவில்லை என்பது இன்னொரு வகையான உண்மைதான்.
இவை அனைத்தையும்
தாண்டி யாரும் கற்பித்த பாடத்தை தனிமை பல முறை கற்பித்துக் கொண்டு தான்
இருக்கின்றது. ஒரு நாளில் ஒரு முறையேனும் உன்னோடு நீ உறவாடிக் கொள் என்கிறார்
சுவாமி விவேகானந்தர் இல்லையெனில் வாழ்க்கையின் சிறந்த மனிதரோடு உரையாடுவதை நீ இழந்துவிடுவாயாம்.
இந்தக் லாக்டோன் நம் பலரிடம்
பல மாற்றங்கள் நிரப்பி இருக்கிறது. காரணம் ஏதோ ஒரு காரணத்திற்காக
ஓடிக்கொண்டு இருந்த நாம் சற்று இளைப்பாறி நம்முள் ஒளித்து வைத்த திறமைகளும்
சில காயங்களும் இந்த விடுமுறையில் புரிந்துகொள்ள முடிகின்றோம்.
உன்னைவிட
உன்னை புரிந்து கொள்ள யாரால் முடியும்??
உன்னை விட உன்னை தேற்றி மீண்டும்
எழுப்பிவட யாரால் முடியும்??
ஒவ்வொரு கண்ணீரிலும் காயங்களும் உன்னோடு
பயணித்தது நீ தானே ??
மானிடமே...
பிறரிடம் உன் உணர்வுகளை பகிர்ந்து
கொள் தவறில்லை!!
உங்களுடன் உரையாடுங்கள்!!
உங்களை நீங்களே உறவாடுங்கள்!!
தன்னைத்தானே நேசிக்கத் தெரியாத ஒருவனை இந்த உலகம் நேசிக்காது!!
நீ தவறு செய்தவன் ஆனால் உன் முதல் எதிரியாக நீயே இரு!!
ஒரு நல்லது செய்கிறாய் எனின் உன்னை நீயே தட்டிக் கொடு!!
உனக்கு
நீயே நண்பணாகவும் நீயே எதிரியாகவும் உனக்குள்ளே போராடு!!
உன் தனிமையிலேயே விடை தேடு!!
நீ
நீயாக இருப்பதே வரம்!!
நன்றி!!
வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

😍😍😍
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteThanuku thanavae pesinal avanuku peyar... 😂😂
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteNice Akka
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
Deleteதனிமை ஒரு வரம்; நாமே ஏற்றுக் கொள்ளும் போது.
ReplyDeleteதனிமை ஒரு சுமை ; நமக்கு விதிக்கப்படும் போது.
Nice mam 👌✨
DeleteNice mam 👌✨
Deleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteLoneliness will conveys everything dr ❤❤
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
Deleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
ReplyDeleteSuper anu..
ReplyDeleteஉடைந்த நேரத்தில் உங்கள் எழுத்துக்கள் மிகவும் ஆறுதல் ..... நன்றி
ReplyDelete