இனி இத மட்டும் சொல்லாதீங்க.....
அன்று முதல் இன்றுவரை படிப்பு வரவில்லை என்றால் ஆடு மாடு தான் மேக்கணும் என்று பிள்ளைகளை திட்டி வளர்த்தது போதும்.
ஆடு மாடுகளை மேய்ப்பது அவ்வளவு இழிவான செயலா?? வீதிக்கு வீதி பள்ளிகளும் கல்லூரிகளும் அதில் படிப்பவர்களும் ஏராளமாய் விட்டனர். ஆனால் படித்தவனுக்கு வேலைதான் எங்கே?? முட்டிமோதி ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின்னும் போக்குவரத்து செலவிற்கு பத்தாமல் போகும் சம்பளம் தான் இங்கே மிச்சம்.
படித்துவிட்டு விவசாயம் செய்ய வேண்டுமா?? படித்தவன் ஆடு மேய்க்கலாமா?? படித்தவன் தறி ஓட்டுவதா?? அவன் இது செய்கிறதா?? அது செய்யவேண்டுமா?? என்று ஒவ்வொரு முறையும் படிப்பின் அகங்காரத்தை தலையில் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் அல்லாடுகிற முட்டாள் மனிதர்கள்தான் நாம்!!
படிப்பு என்பது அறிவை வளர்ப்பதற்கு தானே தவிர அது ஒன்றும் ஆடம்பரம் அல்ல. ஒரு டீ மாஸ்டர் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான். படித்து கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் நான் அவனை விட குறைவாகதான் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றேன்.
இங்கே எனக்குத் தெரிந்த பலர் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கூட படித்துவிட்டு விவசாயம் செய்யும் ஆண்களுக்கு, பெண்கள் தரமருக்கின்றன சில குடும்பத்தினர். அதனாலேயே எவனோ ஒருவனுக்கு கைகட்டி அவன் திட்டும் வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நிலை என்றுதான் மாறும்?? இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இதையே சொல்லிக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்போம்?? கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று சொன்னது இந்த கொரானாவின் நிறுவனமானது.
படித்துவிட்டு இன்று கல்லூரிகளிலும் கம்பெனிகளிலும் ஒரு மாத சம்பளத்திற்காக போராடும் சராசரி மக்களில் நானும் ஒருவள் தான். என் நண்பர்களுக்கு 6 மாத சம்பளம் பாக்கி எனக்கு மூன்று மாத சம்பளம் தர மறுக்கின்றது என் கல்லூரி. இது போல் இன்னும் எத்தனை நபர்களோ??
படித்ததனால் தானே இந்த சமயங்களில் வேலையில்லாமல் திண்டாகின்றோம் ஒரு தனியார் கல்லூரியில் துறைத்தலைவர் முறுக்கு விர்கிறாராம் . சமுதாயமே!! இது உனக்கு சவுக்கடியாய் விழவில்லையா??
வாசிப்பாளர்களே...
போதும் இதோடு நிறுத்துங்கள் !! படித்தவனை பெரியவனாகவும் படிக்காதவன் கேவலமாகவும் பார்த்தது போதும். சொல்லப்போனால் நம்மை விட அவர்கள்தான் வாழ்வில் அதிகம் தைரியமும் மகிழ்ச்சியும் கொண்டுள்ளார்.
படித்தவனே அதிகம் தற்கொலை செய்கிறானே தவிர கையில் ஒன்றும் இல்லாத போதும் தன்னம்பிக்கையோடு நடைபோட்டு வெற்றி பெறுகிறான் இந்த அதிகம் படிக்காதவர்கள்.
ஆகையால்
இன்றோடு நிறுத்துங்கள் !!
இனி யாரும் இதுபோல் சொல்லாதீர்கள் !!
படிப்பு வரவில்லை என்றால் ஆடு மாடு தான் மேக்கணும்!!
நன்றி
வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!



Unmaiyana varigal mam 💯👌
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
Deleteபடிப்பிற்கும் வேலைக்கும் தொடர்பு படுத்த வேண்டியதில்லை, சில திறன்சார் படிப்புகள் தவிர. படிப்பு நமது அறிவை வளர்த்துக் கொள்ள பயன்படும்.
ReplyDeleteநாம் செய்கின்ற வேலையில் நமது படிப்பறிவை பயன்படுத்தி முன்னேறலாம்.
நன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteGood one....
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteNachchuna Sonnenga... Cut short meaning in your words.... Awesome kanmani...😍😍😍😍😍😍😍😍😍😍😍
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteNachchuna Sonnenga... Cut short meaning in your words.... Awesome kanmani...😍😍😍😍😍😍😍😍😍😍😍
ReplyDelete