என்ன வாழ்க்கைடா இது??

வாசிப்பவர்களுக்கு வணக்கம்,

     என்ன வாழ்க்கைடா இது?? என்று நாம் புலம்பிக் கொண்டே இருக்கும் தேசிய கீதம் இதுதான் அல்லவா??

     நம்மை சுற்றி ஆயிரம் அற்புதங்கள் இருந்தும் ஒரு அற்ப ஆசைக்காக நம் சந்தோஷம் அனைத்தையும் தொலைத்துவிட்டு புழம்பிக் கொண்டிருக்கும் உங்களில் ஒருவர் தான் நானும்.

    ஆனால் நமக்கு தெரியாமல் நம்மை சுற்றி ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு பொருளும் நமக்குப் பாடம் புகட்டி கொண்டுதான் இருக்கின்றது.

இந்த கொரானாவின் கொடுங்க நேரத்தில் கூட நம் தலைக்கு மேலே ஒரு கூரையும் தட்டில் தினமும் சோறும் இருக்கிறதே என்று நான் சந்தோஷப் பட்டுக் கொள்ளாமல்,  மன அழுத்தத்தில் ஒவ்வொருவரும் மனதிற்குள் அழுது கொண்டிருக்கின்றோம். 


ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் ஒரு புறம்  இருக்க....
எல்லாம் இருந்தும் வாழ்க்கையே வெறுத்து ஏங்கும் இன்னொரு புறம்.

இந்த காக்கையின் வீடியோவை ஒரு நிமிடம் பாருங்கள். இதை விடவா நம் வாழ்வில் கஷ்டப்பட்டு இருக்கிறோம்??
(This video may not in clarity but the message does. Watch!!)


    நேற்று நான் அறிந்த கல்வி இந்த காக்கை தான். என்றும் இந்த காகம் எங்கள் வீட்டில் உணவருந்த வரும். பல காக்கைகளும் குருவிகளும் எங்கள் தோட்டத்தில் வருவதினால் தினமும் அதற்கு அன்னமிட்டு அகம்  மகிழ்வோம். 

    நிறைய முறை இந்த காட்சியை நான் கவனித்திருக்கிறேன். காக்கை என்றாலே கூட்டமாக வருமாம்.  ஆனால் இந்த காகம் என்றுமே தனியாகத்தான் வரும்.  யாருமில்லா நேரத்தில் தான் இது உணவை எடுத்துக் கொள்ளும்.  இந்த வீடியோவில் கூட யாராவது வந்து விடுவார்களோ என்று பயந்து ஒளித்து நின்ற காட்சியைப் பார்த்திருக்க முடியும். 

    இந்த காக்கையை அதன் கூட்டமே வெறுத்து ஒதுக்கினாலும்  தன்னம்பிக்கையோடு நடைபோடுகிறது.  ஒற்றை காலுடன் இந்த காகம் தினமும் தைரியத்தோடு போராடிக் கொண்டிருக்கிறது.

ஆறறிவு கொண்ட நாம்...
ஏன் கூடாதா ??

யோசிப்போம்...

                                             வாசிப்போம் சுவாசம் வரை !!

Comments

  1. 👌👌 confidence makes everything dr ❤

    ReplyDelete
  2. Valkaila confidence rombo mukiyam tha..ana nanechachu kedakathappo vara vali evalo naal angalum marakkathu

    ReplyDelete
  3. Life is like a circle.... So never stay at any place permanently.... Words are nice and cutshort meaning....
    Lovely kanmani😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...