நீ தான் பேரழகு !!


இங்கே நாம் பலரும் தொலைத்ததை தேடுவதை விட தொலைந்தவர்களையே தேடுகிறோம்.

    இன்னும் எத்தனை நாள் உனக்கு பிடித்தவர்களுக்கு ஏற்பது போல் உன்னை மாற்றி கொண்டிருப்பாய்??

                    நீ....  நீயாய் இருப்பதே பேரழகு என மறவாதே!!

    தவறு என்று தெரிந்தால் தைரியமாக கேள்.
    சரியில்லை என்று தோன்றினால் சட்டென்று விலகு
    பெருந்தன்மை எனும் பெயரில்
    உன் சுயமரியாதையை இழக்காதே.
    உன் காரணத்தை தேடுபவர்களுக்கு....
    உன் காதல் தேவை இல்லை.


    உன் வாழ்வில் கடைசி வரை உன்னோடு பயணிப்பது நீ மட்டுமே!!
எந்த உறவாயினும்  உன்னோடு உறுதுணையாக வேணால் இருக்கலாம்.  ஆனால் உன்னோடு பயணிப்பது நீ ஒருவன்தான். மறவாதே!!


Picture Courtesy : Nandhini. S
அன்புக்காக ஏங்கும் என் அப்பாவிகளே.....

உன்னை நீயே நேசிக்காத போது பிறரை எப்படி நேசிப்பார்கள்??
உன்னோடு உற்ற நண்பனாக நீயே இரு.
உன்னோடு முதல் எதிரியாக நீயே சண்டையிடு.
உனக்குள் நீயே போராடு.
உன்னை நீயே  வென்றிடு.

உன்னை நீ நேசித்த பின்
உலகத்தை இரசிக்க தொடங்குவாய்!!

 உன்னை சுற்றி இல்ல...
உனக்குள் இருக்கிறது உன் சந்தோஷம்.


உன்னை இழக்காதே....

                                            தொலைத்ததை தேடு .
தொலைந்தவர்கள் அல்ல.


                                வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

Comments

  1. Super mam ❤🔥❤

    ReplyDelete
  2. நீ எதிர்பார்க்கும் மாற்றத்தை உன்னில் இருந்து தொடங்கு. பிறர் கூறுவதற்காக உன்னை மாற்றிக் கொள்ளாதே. பிறகு நீ யார் என்பது உனக்கே தெரியாமல் போய்விடும் என்பதை அழகாக எடுத்துரைத்த அனுவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Spr mam it tells how important is self love for a person🔥

    ReplyDelete
    Replies
    1. ஆம். நன்றி என் செல்வமே!!

      Delete
  4. ஆம்| நீதான் பேரழகு��
    உன் தன்னம்பிக்கையில் நீதான் பேரழகு��
    உன் உழைப்பில் நீதான் பேரழகு��
    உன் சிந்தனையில் நீதான் பேரழகு😊
    உன் வரியில் நீதான் பேரழகு��
    உன் கவிதையில் நீதான் பேரழகு��
    நீதான் பேரழகு��

    Everyone should loves ourselves😊
    Nice topic miss anu



    ReplyDelete
  5. அழகிய வரிகள்
    அழகியின் வரிகள்

    எரியும் மெழுகுவர்த்தி
    எங்கோ தேடுகிறது
    வெளிச்சத்தை

    ReplyDelete
  6. நல்ல சிந்தனை அக்கா. தேடுதலே வாழ்க்கை என்றாகி விட்டது. தேடி திரிந்து அலைந்து ஓய்ந்து கடைசியில் என்ன நிம்மதியும் இளமையும் இழந்து அற்பமாக போகிறோம். நன்றி.

    ReplyDelete
  7. Yes da. You should love ourselves. We should believe in ourselves.

    ReplyDelete
  8. Vaazhkaiyin Ethartha Unarvai Azhagaga Sedhukkiyavale... Anaivarukkum Yettrar Pol Irundhadhu Unadhu Varigal...
    Always we love ourself... I like this one Kanmani.and nice lines😍😍😍✌✌✌😆😆😆💜💜💜

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...