எல்லோருக்கும் சொல்கிறேன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நானும் என் பேனாவும்....
வாசகர்களுக்கு வணக்கம்...
கடவுள் மனிதர்களை பலவிதமாக படைத்திருக்கிறார். பல பணிகளும் பல பண்புகளுக்கு மத்தியில் மனித இனம் ஒரு புரியாத புதிர் தான். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து பல மனிதர்களை சந்திக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமாயின் அதை ஏன் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது??
இந்த வாழ்வு எவ்வளவு அழகானது தெரியுமா? அதிலும் அவ்வையார் கூற்றின்படி "மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு, நீங்கிப் பிறத்தல் அரிது" கடவுளின் கிருபையால் கண்டு உண்டு கேட்டு பார்த்து வியக்கும் இந்த வாழ்க்கையை நாம் எவ்வளவு கடினமாக்கி கொண்டிருக்கிறோம் தெரியுமா ??
இந்த மனித இனம் சந்தோஷமாகத்தான் இருக்கிறதா? இல்லையே... எதனால் சந்தோஷமாக இல்லை??
முடிந்த அளவில் ஒருவருக்கு அன்பை பகிருங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள். தன்னை விட ஒருவர் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதை தாங்கிக் கொள்ள நமக்கு மனம் இருக்கிறதா? தன்னால் முடியாததை இன்னொருவர் செய்து காட்டினால் அதற்காக வாழ்த்துக்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்களைப் பற்றி தவறாக சொல்லாமல் இருக்க முடிகிறதா??
எவ்வளவு கேவலமான ஒரு மனித குணம்! ஆதியில் தொடங்கி இன்று வரை புறம் பேசுவது மட்டும் மாறாமல் தலைமுறை தலைமுறையாக சென்று கொண்டு தான் இருக்கிறது.
PC: Vector Stockமுடிந்தளவில் ஒருவருக்கு நாம் மருந்தாக இருக்க வேண்டுமே தவிர அவர்கள் வாழ்வில் நாம் விஷமாக இருக்கக் கூடாது. உங்கள் கண்ணுக்கு வில்லனாக தெரியும் அவர்தான் இன்னொருவர் கண்ணுக்கு உலகமாக தெரிவார்.
முடிந்தால் நல்லதை பேசுங்கள் இல்லையென்றால் வாயை மூடிக்கொள்ளலாமே அது சுலபம் அல்லவே??
தனக்காக எதுவும் யோசிக்காமல்... அடுத்தவர் மனம் நொந்து அவர்கள் வாழ்வில் சுக்குநூறாகி உடையும் அளவிற்கு புறம் பேசுபவர்களே.... உங்களுக்கு எங்கள் நன்றி! எங்களுக்கு ஆயிரம் வேலை இருந்தாலும் உங்களுக்கு இது தான் வேலை போலும். எங்களுக்காக யோசித்து உங்கள் உன்னத நேரத்தை செலவிட்டதற்கு என்ன ஈடு செய்யப் போகிறோமோ??
தன்னைவிட இரண்டு அடி முன்னாடி இருப்பவர்களை மட்டும் தான் நாம் என்றும் பேசிக் கொண்டே இருப்போம். தன்னைவிட நான்கடி பின்னாடி இருப்பவர்களை நாம் கண்டு கொள்வது கூட இல்லை. ஆகையால் மகிழ்ந்து கொள். நீ அவர்களை விட இரண்டு அடி முன்னே நின்று கொண்டிருக்கிறாய்...
மனமே பொறுத்திரு!
காலம் கைகூடும்!
கள்வர்கள் எல்லாம் கண்டறியப்படுவார்கள் !
தென்றல் காற்று உனக்கு வழிவிடும்...
வசந்த காலம் உன்னை கைகோர்த்து கூட்டி செல்லும்...
அதுவரை நம்பிக்கையை கைவிடாதே நல்ல உள்ளமே!!

Here after I too won't hear those words by those irritating people !!! Bcoz they got their words back 🔙.
ReplyDeleteMaking progress in life is the biggest punishment that you give them da!
DeleteReally Nice mam...👌
ReplyDeleteThanks da
DeleteAfter long days my girl is back is more energy ❤️❤️ Hoping best is the only option left in everyone's life 😍😍
ReplyDeleteThanks da. Being in your love and care really soothing my life now!
DeleteYosikkavaikum varigal
ReplyDeleteNandri
DeleteSuper mam....
ReplyDeleteThank you
Deleteநன்று அக்கா. பேசுபவர்கள் பேசட்டும் நாம் நம் செவிகளை மூடிக் கொள்வோம் கவிப்பேரரசு சொல்வது போல் உலகின் வாயில் இரட்டை நாக்கு தான் போலும். நீங்கள் நீங்களாகவே இருங்கள் அக்கா. வாழ்த்துகள்.
ReplyDeleteNandri da. Being around people like you is real blessing.
DeleteAvargal pesum athunai vaarthaigal um kadinamaana vaarthaigal, manathai kaaya paduthum vaarthaigal dhaan, aanal adhai nam mun pesa avargalaal mudiyaathu💯
ReplyDeleteAvargal pesum athunai vaarthaigal um kadinamaana vaarthaigal, manathai kaaya paduthum vaarthaigal dhaan, aanal adhai nam mun pesa avargalaal mudiyaathu💯
DeleteSuper mam💯👍🏻
ReplyDeleteExactly! if not ..... that's it. Lol
ReplyDelete