வாழ்வது கவிதை
வாசிப்பார்களுக்கு என் வணக்கங்கள்.
வாழ்க்கை
வாழ்வது ஒரு கவிதையாகும். அதில் இன்பமும் இருக்கும் இன்னல்களும் இருக்கும்.
எதை அதிகம் உட்கொண்டாலும் உடம்பிற்கு வாதம் ஏற்படும்.
நாம் அனைவரும் அன்றாட
வாழ்வில் ஒருமுறையேனும் ஓயாமல் சொல்லும் ஒரே வார்த்தை "எனக்கு மட்டும் ஏன்
இப்படி நடக்கிறது"?. இவ்வரிகள் அனைவரின் வாழ்விலும் எழுதப்படாத சம்பிரதாயமாக
இருக்கத்தான் செய்கின்றது.
காயங்களை கண்டபோதெல்லாம் அழுதுவிட்டு உடனே பிறர் காணும் முன்னே எழுந்து விடவேண்டும்.
ஒவ்வொரு காயங்களும் கனவுகளுக்கான வழி. வலியை நேசிப்பவன் காலத்தால்
போற்றப்படுகிறான்.
விடியாத இரவு ஒன்றுமில்லை முடியாத பகல் ஒன்றுமில்லை. இரண்டுமே
வாழ்விற்கு அவசியம் தான். அமிர்தம் ஆயினும் அளவோடு உண்டால் தான் ஆரோக்கியம்.
பெரும்பாலோனோர் இன்பங்களை நோக்கியே பயணிப்பதால் இங்கே பலரின் வாழ்க்கை இன்னல்கள் ஆக
முடிகின்றது. இன்பத்தையும் துன்பத்தையும் ஒருசேர பார்த்து பழகிய பின் இன்பமான
வாழ்க்கையை வாழலாம்.
சற்று பின்னோக்கி செல்லலாம்.........
உங்கள் வீர தழும்பு இன்றி
வாகனம் ஓட்ட பழகி இருக்க முடியுமா ?? சான்றோரின் சவுக்கடி இன்றி
இன்று சரளமாக நாம் பேசி இருந்திருக்க முடியுமா ???
மனிதமே வீழ்வது
தவறில்லை வீழ்ந்த பின்னும் எழாமல் உறங்கிக் கொண்டு இருப்பதே தவறு. இன்பம் நோக்கினால் இழைபாரு
அதே துன்பம் நோக்கினால் துவண்டு விடாதே. இன்பமும் துன்பமும் ஒரு சேர்ந்த
நாணயம் தான்.
இடி இடித்தால் இடிந்து விடாதே!!
மின்னல் நீட்டி மடிந்து விடாதே!!
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும் காலம் வரும் .காத்திருப்பதில் தவறில்லை .
காரணமின்றி காத்திருப்பது தான் மிகப்பெரிய தவறு.
புறம்
பேசுபவரை புறக்கணிக்காதே... அவர்கள் பேசியதால் தான் இன்று நான் உங்களோடு பேசிக்
கொண்டிருக்கிறேன். அவர்கள் ஒவ்வொரு பேச்சிலும் நீ யார் ?? நான் யார் ?? என்பதை
தெளிவாக சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றது.
துன்பம் என்ற துப்பட்டாவில் துயில் கொண்டது போதும். அது ஒரு மூடு பணியாய் உன் முகங்களை மூடியது போதும்.
துன்பத்திலும் துக்கங்களும் துவளாமல் துணிந்து எதிர்த்து, சிரித்துக்கொண்டே
சிகரம்தொடு!!
வாழ்க்கையை வெள்ளை - யாலும், வர்ணங்களாலும் தீட்டுவது உன்
கையில். வர்ணம் பூசி வாழ்க்கையை வண்ணமயமாக்கு.
வாழ்க்கை சில முறை தன்
அரவணைப்பால் அரவணைக்கும். பலமுறை சவுக்கடியிட்டு சண்டை
பிடிக்கும். உன்னை வாட்டும் போதெல்லாம் புதிதாய் ஒரு வழி பிறக்கிறது என்று
வணங்கிக் கொள்.
வாய் மொழியை காட்டிலும் இயற்கை மொழி இனிப்பானது.
ஒரு தேனீர் குவலையோடு கவலைகளை மறந்து காற்றில் மித....
நொண்டியடிக்கும் தென்றலில் இரண்டு நிமிடம் உன் மனதைத் திற ....
மூச்சை நன்றாக இழுத்து உன் முக்கால்வாசி புலம்பல்களை மறந்திட....
உன் பால்கனியில் நீ மீண்டும் பிறந்திட....
வானம் உனக்கு வழிவிட...
காலம் உனக்கு கனிந்திட....
என் வாழ்த்துக்கள்!
வாழ்வது கவிதை !!
வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

Your poems are as lovely as you
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
Deleteஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது என எல்லோரும் கேட்கும் சாதாரண கேள்வியை வைத்து கவிதை எழுத உனக்கு மட்டும் எப்படி முடிகிறது? வாழ்வது கவிதை என தலைப்பை வைத்து நாட்டில் வாழும் அவலங்களைப் பட்டியலிட்டு நீ எழுதிய கவிதையில் வாழ்வது கவிதை அல்ல தன்னம்பிக்கை. வாழ்த்துக்கள்
ReplyDeleteThank you sir
DeleteMelting mam❤
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
Delete💗 selection of perfect words adds extra spicy to your lines da 💗
ReplyDeleteYOU NEVER FORGET TO LOVE ME. Thank you for your appreciation. keep supporting.
DeleteThank you for your appreciation. keep supporting.
ReplyDeleteNice anu..
ReplyDelete