கொரோனா- வின் காதல்


     கொரோனா வின் தாண்டவத்தில் நாம் தவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம் என்பதில் சந்தேகம் இல்லை.  ஆனாலும் நியூட்டனின் மூன்றாவது விதியை போல்,  என் பெயரின் அர்த்தத்திற்க்கு (swan- அன்னப்பறவை) ஏற்ப நன்மையும் தீமையும் பிரித்து அதில் நன்மையை மட்டுமே உட்கொண்டு வாழவேண்டும் என்பதற்கான பதிவுதான் இது.

     இந்த உயிர்க்கொல்லி வைரஸ் நமக்கு நிறைய கற்றுக் கொடுத்து தான் செல்கின்றது அதில் நான் மிகவும் கற்றுக்கொண்ட ஒன்று......  என்னை நானே தேடிச்சென்ற பயணம்தான்.

     நான்கு வருடங்களாக எனக்காக நான்கு நிமிடங்கள் கூட நான் செலவிடவில்லை. இங்கே பலர் அப்படித்தான். யாரும் என்னிடம் பேசவில்லை என்று புலம்புகின்றோம் ஆனால் எத்தனை நாள் நம்மிடம் நாமே பேசியிருக்கிறோம்???  ஏதோ பிறந்தோம் அதனால் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று பல நாட்கள் இரவோடு சேர்ந்து விடியலை எதிர்பார்த்து, என்னை படித்துக்கொண்டும் பல நாட்கள் அழுது கொண்டும் உறங்கியது உண்டு. 

    வாழ்க்கையில் எல்லோருக்கும் மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. காயம் இல்லாத மனிதனை யாரும் கண்டதில்லை.அவர்  அவருக்கு ஏற்றமாதிரி காயங்களும் கண்ணீரும் அடிமனதில் புதைந்து கொண்டு தான் இருக்கின்றன. எனக்கும் அப்படித்தான் சொல்ல முடியாத காயங்களும் வெல்ல முடியாது சில நினைவுகளும்!!             

    கொரோனா- வின் கொடூர ஆட்டத்தில்  என்னை மீண்டும் புதுப்பித்து அடையாலம் கண்டு கொண்டு இருக்கிறேன். முதலில் உண்டு, உறங்கி தான்  என் காலங்களை கழித்தேன்.  பின்பு என்னை நானே தேடிக்கொண்டு பல இடங்களில் வாசித்துக் கொண்டும் என்னை நானே புரிந்து கொள்ள தொடங்கினேன்.

     ஒரு வாரம் நான் இல்லை என்றாலும் என்னை தேடி கண்டு கொள்ள இங்கு யாரும் இல்லை என தெரிந்து கொண்டேன் இந்த இணையதள வாழ்வில். ஆகையால் எனக்கு என்ன வேண்டும் ??  என்று  கேள்வி எழுந்த பொழுது எனக்கே பதில் தெரியவில்லை.  பல நாட்களாக உறங்கிய  என் அலமாரியை தூசிதட்டி சிறிது புத்தகங்களை எடுத்து வாசிக்க தொடங்கினேன்.  வாசித்த உடனே வேறு உலகிற்கு சென்றேன்.  என்னை நேசிக்கவும்  தெரிந்த கொண்டேன்.

     இதுவரை என் பேனா குனிந்த தலையை விட்டு நிமிரவே இல்லை என்பதை உண்மை . ஆனால் இந்த சூழலில் மீண்டும் என் பேனாவிற்கு என் உணர்வினால் மையிட்டு சில கவிதைகளை கிறுக்கி கொண்டு வெறும் 20 நாட்களில் ஒரு கவிதை புத்தகத்தை எழுதி இருக்கின்றேன். எத்தனை கவிதைகளை நான் கிறுக்கினும்,  இப்புத்தகம் எனக்கு என்றுமே பொக்கிஷம் தான்.  என்னைத் தேடிக் கொண்டு சென்ற பொழுது இந்த வார்த்தைகள் எல்லாம் எனக்குள் இருந்து என்னை நெறிப்படுத்தியவை. என்னை புதுப்பித்து புதிதாய் பிறந்தவள் போல் இப்புத்தகம் என்னை எனக்கே காட்டிக்கொடுத்தது.

                                                   

என் முதல் கட்டுரைக்கு காலம் செலவழித்து உங்கள்  கருத்துகளை பதிவிட்டவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  நான் முன்னமே சொன்னது போல் கற்பனைகளால் என் கனவுகளை வளர்த்து அதில் கானல் நீரால் புன்னகை பூத்து வருகின்றேன். இதோ நான்  உங்களுக்கு சொன்னது போல் எனது கவிதையை இந்த  பதிப்பில் பதிவிடுகிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.


தூங்கா இரவு

 

ஒவ்வொரு நட்சத்திரமும்…

நம் நினைவுகளை பிரதிபலிக்க

அதோ !! அந்த வெள்ளை துப்பட்டாவில்

என்னை மயக்குகிறளே…..

அவள் முகத்தை நினைவூட்டுகிறார் !!

 

இங்கோ ….. ஒருத்தி மின்னலிடும் கண்களால்…..

துடித்துக் கொண்டிருக்கிறாளே….

என் இடுப்பை நீ இறுக்க….

நம் இன்ப இன்னல்களை….

காட்டிச் செல்கிறார் !!

 

அதோ…  அங்கே ஒருத்தி தனியாக

தயங்கி வருகிறாளே..

அவளோ தனிமைக்கு தலையணையாய்…..

என் புலன்களுக்கு ….

தண்ணீர் பாசனம் போடுகிறாள் !!

 

அங்கே மூவரும்…

கைகோர்த்து விளையாடி மகிழ்கின்றனரே…

உன் பாதச் சுவடை….

நான் பிடித்து நடந்ததை

வரிசையில் நின்று நினைவுபடுத்துகிறாள்!!

 

ஆங்காங்கே தோன்றி மறையும்…

மாயவளின் முகம்

நம் சண்டையை பாசாங்கு செய்கிறாள்!!

 

என் இருட்டுக்கு இல்லை…

 திருட்டு பயம்.

 

வாடிய மல்லியிடம்…..

யார் வாசனை நுகர வருவார் ??

 

கிழிந்த தாளில்….

யார் கவிதை வரைய துணிவார்??

 

நான் கூப்பிடும் போதெல்லாம்…

குளித்துக் கொண்டே இருக்காதே…

புரிகிறது நீ நிற்கிறாய் என!!

 

 பகலில் சிரித்து…

 இரவின் இருட்டில் துடித்து….

 

தூக்கமில்லாத இரவில்…

துக்கத்தின் மடியில்…

இருளை பொத்திக்கொண்டு…

இருட்டோடு இன்னொரு வாழ்க்கை!

அடடா !! வாழும்போதே நரகமா??

 

மையிட்ட வானமோ.

நான் வாசிக்க

வீணாக அழுகிறது

என் விம்மல்களுடன்!!

 

இருளை பேனாவில் ஊற்றி…

நான் எழுத…

 

என் தோழியாய் தேற்றுகிறாள்

காதலனை இழந்த நிலா!!

 (இரவில் நட்சத்திரத்தை பார்த்து பாதை கண்டு ஓடிய பாவையின் பதிவு)


வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

நான் பதிவு செய்துள்ள படங்கள் எல்லாம் என் மாணவி நந்தினியின் ஓவியங்கள்.







































Comments

  1. Thanks for the opportunity to given me mam.. Wonderful ✨��lines on fire swanthitha������������

    ReplyDelete
    Replies
    1. I should thank you for making blog so awesome by your paintings da. Thank you for your appreciation. keep supporting.

      Delete
  2. Thanks for the opportunity to given me mam.. Wonderful ✨��lines on fire swanthitha������������

    ReplyDelete
  3. Osum mam.. Really interesting❤😍🌸

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Nice...☺️☺️☺️☺️☺️

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. 💖 shining through ur words dr 💗

    ReplyDelete
    Replies
    1. aww.. my love!! Thank you for your appreciation. keep supporting.

      Delete
  9. Thank you for your appreciation. keep supporting.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...