சில்லறை சிறைச்சாலை!!

    சில சில்லறைகளை  சம்பாதித்து விட்டால் சந்தோஷம் வரும் என நம்பும் என் தோழமைகளே!!

     ஒரு  நிமிடம் யோசியுங்கள் ......
    கோடி கோடியாய் பணம் இருந்தும் கேட்பார் இல்லாமல் இறந்து போனவர்கள் ஏராளம்.  பல சினிமா பிரபலங்கள் கூட இதில்  பிரதிபலிக்க தான் செய்கின்றன.

    பணம்,  செல்வாக்கு என அனைத்தும் இருந்தும் அனாதையாய் தான் இறந்துவிடுகின்றனர்.  நாட்டை ஆண்டவர்கள் முதல் நடித்து களைத்துப் போனவர்கள் வரை இதில் உள்ளடக்கம்.

     என் மானிடமே!!

     நாணயங்கள் தொலைந்து போதிலும் நண்பர்கள் இருப்பார்கள். கோடிகள் தொலைந்தபோதும்  குடும்பம் உன்னை குணப்படுத்தும் என அறிக!!(சம்மாரிப்பதால் மட்டுமே மதிப்பு என ஏமாந்து போகாதீர்கள்.)

Picture Courtesy : Nandhini.S
   

 கையளவு காசு இருப்பவனே கனமில்லாத மனிதனாய் மகிழ்ந்து
வாழலாம்.  சம்பாதித்து விட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று போராடுபவர்களே...  சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ சிரிப்பதும் அவ்வளவு முக்கியம் தான்.

     குடும்பத்தோடு செலவிடும் நேரங்கள் எல்லாம் கொடுத்த வைத்த காலம். பிள்ளைகளின் ஆடம்பரத்துக்காக பணத்தின் பின் ஓடுபவர்களே!! அந்த பிஞ்சு மனதின் ஏக்கங்கள் நீர் அறிவீரா ???

     வீடு எனும் ஒரு பெரிய சிறையில் ... வேறு எங்கும் செல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பல மனிதர்களும் இதில் உள்ளடங்குவர். வீடு இல்லாதவனுக்கு விண்வெளி வசமாகிறது, வீதீயே வாசல் ஆகிறது.

    பணம் இருப்பவனுக்கு படுத்தவுடன் தூக்கம் வருவதில்லை.  சில நேரத்தில் சில மனிதர்களிடம் உரையாடுவதும் உறவாடுவதும் அவசியம்.  பணத்தைத் தேக்கி வைத்தல் உன் மன பாரத்தை ஏற்றிக்கொள்வாய்.

    வாழ்க்கையில் பணம் அவசியம் தான் ஆனால் முக்கியமல்ல இரண்டிற்கும் வேறுபாடு உண்டு .

                                        அறிந்து ....
                                        மகிழ்ந்து....
                                        வாழுங்கள்.

                            வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!



Comments

  1. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

      Delete
  2. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

      Delete
  3. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
  4. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
  5. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
  6. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
  7. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
  8. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்

      Delete
  9. Always Nee Enkitta Sonnadhu dhan Nyabagam Varadhu Family Kooda Time Spend pannum Podhu Azhaga Irukkum nu. Yours love are your family.... True thoughts with a great fact for nowadays gen peoples..... Nice work Kanmani😍😍😍😍💜💜💜💜👍👍👍👍👍👍👍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...