நண்பர்கள் தினம்!!
வாசிப்பவர்களுக்கு
வணக்கங்கள்,
இன்று நண்பர்கள் தினமாம்.
நாமும் நம் கருத்துக்களை பதிவிட
வேண்டும் அல்லவா??
நம் அனைவருக்கும் பள்ளிப்பருவ நண்பர்கள் தினம் கொண்டாடியது
ஞாபகம் இருக்கும் கலர் கலராய் கயிறுகளைக் கொண்டு நம் கைகளை அழகாக்கும்
நண்பர்கள். யார் கையில் அதிகம் கயிர் இருக்கிறதோ அவர்களுக்கு அதிக
நண்பர்கள் என்று பெருமையோடு நடைபோட்ட காலமெல்லாம் சென்றது.
இன்று மனம்
விட்டு பேச அருகில் யாருமில்லை.
காயத்தை துடைத்து கட்டியணைக்க யாருமில்லை.
வெறுமையின் சென்றபோதெல்லாம்
நண்பர்களின் ஞாபகம் மட்டுமே விருந்து வைத்தது.
நினைவில் இருந்தவர்கள்...
இன்று நிஜத்தில் இல்லை...
ஏனோ இந்த தினத்தில் மட்டும்
நான் உனது வாட்ஸ்அப் எண்னை பதிவிட்டிருக்கிறேன் என்று ஞாபகப்படுத்த
குறுஞ்செய்திகளை தட்டுகின்றன சிலர்.
அதுவும் ஃபார்வர்டு மெசேஜ்களால்(Forward Message) நம்மை ஞாபகம் வைத்துக்
கொண்டிருக்கிறோம் என்று நினைவு படுத்துகிறார்களாம்.
அன்பு நண்பர்களே,
நட்பு
என்பது ஒரு நாளில் மட்டும் நினைத்துக் கொள்வதில்லை.
சோகம் வரும்போது கொஞ்சம்
நேசம் காட்டுங்கள்.
அன்பிற்கு ஏங்கும் நேரத்தில் அனைத்து கொள்ளுங்கள்.
இந்த
நண்பர்கள் தினம் ஒரு நாள் கூத்து அல்ல.
நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
நன்றி!!
வாசிப்போம் சுவாசம் உள்ளவரை

Good good...
ReplyDeleteAwesome👏
ReplyDelete❤
ReplyDeleteவாசிப்போம் சுவாசம் உள்ள வரை என்று நிறைவு செய்திருக்கிறீர்கள். அத்துடன் நண்பர்களே நேசிப்போம் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மிக்க அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteNice
ReplyDeleteTrue...happy frdsp day
ReplyDelete🤗🤗🤗
ReplyDelete