நான் நானாக இருக்கிறேனே?? தயவுசெய்து??

வாசிப்பவர்களே,
     இன்று என் எழுத்துக்களை நம்பி அல்ல...  என் உணர்ச்சிகளை நம்பி இதை எழுதுகிறேன்.
     பெண்ணை பெண்ணாக இருக்க விடுங்களேன்.  ஒரு பெண்ணாக பிறந்து IAS, IPS ஆகிவிட்டார் .முதன் முதலில் ஒரு பெண் ஆட்டோ டிரைவர்கள் என்று எங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிற நீங்கள் தான் எங்களை பெண்பால் விகுதி போட்டு இழிவு படுத்துகிறீர்கள்.
     பெண் என்றால் ஒரு வீட்டுக்கு பொக்கிஷமாம். சிலருக்கு அது செல்வமாம். பலருக்கு அது மரியாதை.... நாங்களும் உயிருள்ள பொருள்  என்று அறியாதது ஏன்??
     அழகுக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் நாங்கள் படைக்கப்படவில்லையே?? எங்களை வர்ணித்து தேவதைகளாகுவதும் நீங்கள்தான்...   வில்லியாக  காட்சிப்படுத்தும் நீங்கள்தான். 

     எங்களை ரசித்து பாடுவதும் நீங்கள் தான் எங்கள் இராட்சசி ஆக்குவதும் நீங்கள்தான்.  அது எப்படி உங்களால் நேசித்த ஒருவரை இவ்வளவு இழிவாக பேச முடிகிறது??

     அன்பை எதிர்பார்க்கும் எங்களிடம் ஆளுமை காட்டுவது சரியா??  நேற்று தான் ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன். நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்தனை கெட்ட வார்த்தைகளும் ஒரு பெண்ணை அல்லவா குறிக்கிறது??  ஒரு ஆணை திட்டினால் கூட அவனை இழிவு படுத்த  அவன்  அம்மா தங்கை அக்கா, மனைவி எனபவர்களை வைத்துத்தானே திட்டுகிறோம்??
மானிடா இது தவறு இல்லையா??

     எங்களை உங்கள் வீட்டில் உள்ள அழகு சாதனப் பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டாம். எங்களையும் கடவுள் ரத்தமும் சதையுமாக தானே படைத்திருக்கிறார்??


ஆம்!! ஒத்துக்கொள்கிறேன் இதில் சில பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் சீரழிந்து வருகின்றனர். ஆனால் பல பெண்கள் இங்கே இப்படி தான் இருக்கின்றோம்??
.
முன்பொரு பதிவில் குழந்தைகள் வன்கொடுமை செய்யும் அயோக்கியர்களை பற்றி எழுதியருந்ததற்கு கூட ஒரு ஆண்மகன் அந்த பச்சிளம் குழந்தைகளை நினைத்து பாடாமல் தான் ஒரு ஆண் என்று அவர்களுக்கு சிபாரிசு கேட்டு ஒரு கேள்வியை நீட்டினார்.  இந்த பதிவிலும்  கண்டிப்பாக அதுபோல் ஒரு கருத்து பதிவாகும் என நம்புகிறேன்.

அடே இறைவா...
இந்த கற்பு எங்களுக்கு வரமா??  சாபமா??  சாபம் ஆயினும் எங்களை அகலிகையாக சபித்து விடு!!

நாங்களும் இவ்வுலகில் ஒரு ஓரமாக வாழ்ந்துவிட்டுப் போகிறோமே??  குறிப்பிட்ட சில ஆண்கள் தான் சொல்கின்றேன். அவர்களுக்கு மட்டுமே இதைப் படித்ததும் கோபம் வரும். உங்களுக்கு எப்படி??

பெண்களை பெண்களாக இருக்க விடுங்கள்.
நீங்கள் பாராட்டவும் வேண்டாம்
நீங்கள் தூக்கி எறியவும் வேண்டாம்


                                     வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

Comments

  1. Super mam❤️🤩 💯 it's crct

    ReplyDelete
  2. நிதர்சனமான உண்மை அக்கா. வார்த்தைகள் இல்லை. இது அனைத்து பெண்களின் மனக் குமுறலாகவே இருக்கிறது அக்கா. முகமூடி மனிதர்களே தெரியவில்லை எது தன்னுடைய உண்மை முகம் என்று.. கோபம் கூட இல்லை. வருத்தம் மட்டுமே பெண்கள் படுக்கைக்கு மட்டும் தான் வேண்டும் என்றால் வேசிகளாக நம்மைப் படைத்து இருக்கலாம். வார்த்தைகள் இல்லை. மௌனமாக கடக்கிறேன்..

    ReplyDelete
  3. அருமையான பதிவு Mam 👌💯

    ReplyDelete
  4. Yes sis .... Yennoda life neraya adi pattutan...

    ReplyDelete
  5. Yes sis .... Yennoda life neraya adi pattutan...

    ReplyDelete
  6. Entha ulagathi peratha anaivarukum anaithum samam..vetty sellavum vendam,velagi sellavum vendam..anaivarum samam endu nenaithala pothu...Entha pathivu anaithu(boysb & Girls) ku poruthum...❤️❤️

    ReplyDelete
  7. Sometimes a single way can elaborated to the different ways because of that situation... Nice words and touchable lines kanmani👏👏👏👏👏💜💜💜💜💜💜💜

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...