தமிழ் சினிமாவின் தெரியாத உண்மைகள்!!

வாசிப்பவர்களுக்கு வணக்கம்,

இதோ!!  இன்றும் ஒரு புதிய தகவல். 

    சேக்ஸ்பியர் (Shakespeare ) எழுதிய  ட்வெல்ஃப்த் நைட் (Twelfth Night ) எனும் நாடகம் 1601  வெளியிடப்பட்டது.  இந்த நாடகத்தை தழுவி 1949 ஆம் ஆண்டு கன்னியின் காதலி என்ற திரைப்படம் வெளிவந்தது.  

    இந்த ட்வெல்ஃப்த் நைட் கதையில் செபாஸ்டியன்,  வயோலா என்ற இரு சகோதர சகோதிர்களை மையமாக கொண்டது.  இருவரும் கடல் சீற்றத்தினால் படகு உடைக்கப்பட்டு வெவ்வேறு பக்கம் கரை சேர்கின்றன.   வயோலா தான் ஒரு பெண் என்பதை உலகிற்கு மறைத்து ஒரு அரசனுக்கு சபாஷியன் என்ற பெயரில் பணிபுரிவாள். இறுதியில் சகோதர சகோதிரள்கள் இணைவதே கதை. 

    கன்னியின் காதலி கதையில் ஆதித்யன்,  சந்திரிகா என அண்ணன் தங்கை இருவரும் கடல் சீற்றத்தினால்  வெவ்வேறு பக்கம் கரை சேருகின்றனர்.  சந்திரிக்கா என்பவள் கலைமணி எனும் ஆண் பெயரிட்டு அங்கே இருக்கும் அரசருக்கு பணிபுரிகிறாள்.

                        இரண்டுக்குமே ஒரே கருப்பொருள் தான்.
Picture Courtesy : Nandhini.S

     அதேபோல் ஷேக்ஸ்பியர் எழுதிய கிங் லியர் (King Lear - 1606) என்ற நாடகத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் குணசுந்தரி.  1955 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் சாவித்திரி நடிப்பில் வெளிவந்த படம்.

     கிங் லியர்  நாடகத்தில்  ராஜாவுக்கு மூன்று புதல்விகள்.  மூவரில் கடைசி புதல்வியான கார்டிலியா அரசருக்கு மிகவும் செல்லப்பிள்ளை.

     என்னை எவ்வளவு பிடிக்கும்??  என்று ஒரு கேள்வியை கேட்டு புதல்விகளுக்கு  தன் அரசாங்கத்தை பிரித்துக் கொடுக்கிறார்.  முதல் இரண்டு புதல்விகள் ஆஹா!! ஓஹோ !1 என்று புகழ்ந்து தங்களது அரசாங்க பங்கைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் அதிகம் எதிர்பார்ப்புடன் கார்டிலியா - வை கேட்டால்,  ஒரு அப்பாவாக நான் உங்களை எவ்வளவு நேசிக்க முடியுமோ அவ்வளவு நேசிக்கிறேன் என்று மட்டும் கூறுகிறாள்.  இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மன்னர் உனக்கு எதுவும் இல்லை இங்கே கோவமுற்ற ராஜா விரட்டி அடிக்கிறார் அவளை.  ஆனால் இறுதியில்  கார்டிலியா மட்டுமே உண்மையாக நேசித்தவள் என்று புரிந்து கொள்கிறார்.

     அதே தான் இங்கேயும் குணசுந்தரி படத்தில், உகர் சேனா  ராஜாவுக்கு மூன்று புதல்விகள்  இருக்கிறார்கள்.  அதில் கடைசி புதல்வியான குணசுந்தரி தான்  உண்மையாக நேசிக்கும் மகளாக கடைசியில் திகழ்கிறாள்.

     என்னங்க அதிர்ச்சியா இருக்கா??
    எல்லாரும் வீட்டிலேயே  இருங்க...
    எப்பவாது தோணுச்சுன்னா இந்த படங்களை பாருங்க....

     ஷேக்ஸ்பியரை கதைகளை படித்து தான் தெரிஞ்சுக்கணும் இல்ல...
     இப்படி பார்த்து தெரிஞ்சுக்கலாம்.

      படம் பாருங்க !!
     உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

                                வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

Comments

  1. In a single article, you have given clear picture about two novels of Shakespeare and two Tamil movies. We can never forget these stories. Thank you so much Anu. Keep rocking

    ReplyDelete
  2. Nice mam 👌very useful information

    ReplyDelete
  3. Words are mesmerized and a good thought about the Shakespeare's mystery lines... Nice lines Kanmani👍👍👍😍😍😍😍😍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...