காவலா?? களவா?

என்னங்க சார் உங்க சட்டம்

    காவலான நீ களவாணியாய் மாறியது எப்போ??
காவல்துறை உங்கள் நண்பனாம்?? 🤣🤣 கேட்கையில்  சிரிப்புதான் வருகின்றது அல்லவா??

    சிறைச்சாலையில் காட்டவேண்டிய லத்தியை....
சாமானியர்கள் இடம் அல்லவா காட்டுகிறீர்கள் ??
எப்போது காவல் நிலையத்தில் கால் வைக்க பயந்துதோமோ...
அப்பொழுதே உங்கள் கண்ணியம் தோற்றுவிட்டது காவலர்களே...

    சாட்சி சொல்பவனை சந்தேகிப்பது தவறில்லை. அவனையே சிறையில் இட்டால்??
மதுவுக்காக காவல் நிற்கும் என் காக்கி- காரன்களே...
மாதுகளுக்கு ஏன் நிற்கவில்லை??

    பலாத்காரம் செய்தவனை பங்களாவில் வைத்து பாதுகாப்பு கொடுக்கும் என் சிங்கங்களே....
பதவிகளைப் பிரயோகித்து பாலியல் வன்கொடுமை செய்யும் எங்கள் வீட்டுக் காவல் சிறுத்தைகளே ...

    காவல் நிலையத்திற்கு சென்றால் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை போய்....
களவாண்டு விடுவார்கள்...
இல்லை கற்பழித்து விடுவார்கள்...
என்ற நம்பிக்கையை வேரூன்றி காடாக வளர்த்து விட்டிர்கள்.
வாழ்த்துகள்!!
                                                     Picture Courtesy : Nandhini.S

    தப்பு செய்தவனை தட்டிக் கேட்க முடியவில்லை.
கொலையாளியை கண்டுபிடித்தாலும் தண்டிக்க மனமில்லை.

    சம்பளம் பத்தவில்லையா ??
சில்லறையை வீசுகிறோம் கோள்.
லைசன்ஸ் இல்லை என்று பிச்சை எடுக்காதே !!

    கோடீஸ்வரன் கால்களை பிடிக்கிறீர்கள்.
நாங்கள் கொடுக்கவில்லை என்றால்...
உங்கள் கைகளையும் நீட்டுகிறீர்கள்.

    வெயில் மழை பாராமல், காலம் நேரம் தெரியாமல் உழைக்கும் உண்மைக்கு- சொந்தக்காரர்களே....
உங்களின் சேவை நாட்டுக்காக??
இல்லை ஒரு சில நான்கு பேருக்கா??

நாங்கள் தவறு செய்தால் பலநாள் சிறைச்சாலை!!
நீ தவறு செய்தால் பணிமாற்றம்!!
அருமையான சட்டம் ...

    எனது வரிப்பணத்தில் வயிறு நிரப்பியும் பத்த வில்லையா?? என் சம்பளத்தில் பணத்தில் சாமேசா வாங்க வேண்டுமா உனக்கு??
உங்கள் சண்டியர் தனமெல்லாம் சராசரி மக்களிடம் மட்டும்தானே???

    காவலாளிகளுக்கே காவல் தேவைப்படுகின்ற காலம்.
இதில் நீங்களா எங்களை காக்க போகிறார்கள்??
என்னை காக்கா விட்டாலும் பரவாயில்லை.
களவாடி செல்லாதே.

    தவறுக்கு துணை நிற்கும் காவல் துறையே...
நீ மாறாவிட்டால்..
உன் பணிக்கான பொருள் மாறிவிடும்.

    பணத்தை அடிப்பதை விட...
எங்களை பாதுகாக்க பயிற்சி செய்.

(அட !! நான்  உங்கள சொல்லுவேனா??  செய்திகளில் வந்ததை சொன்னேன்-ங்க)


                          வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

 


Comments

  1. Replies
    1. Thank you for your appreciation. Keep supporting.

      Delete
  2. எதார்த்தமான உண்மை அக்கா.

    ReplyDelete
    Replies
    1. Yes.Thank you for your appreciation. keep supporting.

      Delete
  3. Truth of Reality.. .🔥🔥🔥🔥

    ReplyDelete
  4. சாமானியனின் குரலை சரியாக எதிரொலித்தது தங்கள் வரிகள். வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...