அரசு- ஆகா- ஓகோ!!

நாம் எங்கே போகின்றோம்???

அரசாங்க வேலைக்கு  அன்பளிப்பு வேண்டுமாம். 
நிரந்தர வேலைகளுக்கு நிவாரணம் தேவையாம். 
ஆனால் தனியார் வேலையாட்களுக்கு தினசரி கூலி கூட கிடையாதாம். 

என்னங்க சார் உங்க சட்டம்?? 

காசு இருப்பவனுக்கு கவர்மெண்ட் உத்தியோகம். 
பணம் இருப்பவனுக்கு பதவி. 

போட்டித் தேர்வுகளுக்குள் போட்டிகள் இருக்க தான் செய்கின்றன. விடைக்கு ஒரு விலையும் வினாத்தாள்களுக்கு ஓர் விலையும் பேரம்பேசி போட்டிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

 ஒவ்வொரு கல்வி வளாகமும் வங்கிகளாக உருவெடத்து
 வருகின்ற. ஒழுக்கமும் நேர்மையும் கற்றுத் தருபவர் லஞ்சம் கொடுத்து வகுப்பறைக்குள் சென்றால் எப்படி இருக்கும்? ? 

கல்வியின் கர்ப்பை காசு கொடுத்து காம வெறியினால் கழுத்தை அறுத்து விட்டது போதும். கல்விக்கண் திறக்கும் கூட்டங்களே பணப் பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டு பச்சிளம் குழந்தைகளை ஏன் படுத்துகிறீர்கள்? ? 

அதிகாரமும் அறிவும் காலத்தின் செலவில் அழிந்து விட்டனவா ??

போகட்டும்....
யாரைச் சொல்லி என்ன பயன் ??

கொடுக்கிறவன் இருக்கிறவரை கேக்குறவன் கேட்பான். கேட்கிறவன் இருக்கும் வரை கொடுக்காதவனும் கெடுவான். 

இதுவும் கடந்து செல்லும் என கடக்கமுடியவில்லை. 

கனக்கிறது....

                                           Picture courtesy: Nandhini.S

அறிவை ஊட்டும் ஆசான்களே உங்கள் அனுபவங்களுடன் நல்- ஆலோசனையும் சற்று அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். கல்வி மதிப்பெண்களுக்கு மட்டுமல்ல அடுத்தவரை மதிக்க கற்றுத் தருவதற்கும் தான்!! 

நீங்கள் தாள்களை மட்டுமல்ல தீட்ட வேண்டியது அவர்களின் திறமையும் தான்.

ஊதிய உயர்வுக்கு போராடும் உத்தமன்களே....
உங்களை நம்பி கல்லூரிக்குள் வரும் பூக்களை தானாக மலர விடுங்கள்!!

ஆங்கிலம் அறிவல்ல அவசியம்!!தமிழ் தாழ்வல்ல தன்னம்பிக்கை(அடையாளம்)!!என்று கற்றுக் கொடுங்கள்.
எத்தனை மொழிகளில்  தாகம் இருப்பினும் தாய் வீடான தமிழ்-லை மறவாத என்று சொல்லிக் கொடுங்கள்!!

(ஆறாம் விரலாய் சிலரின் செயல்களே கூறினேன். உங்களை அல்ல!!)



                          வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

 


Comments

  1. எதார்த்தமான உண்மை அக்கா.

    ReplyDelete
  2. Unmaithan pa...ana atharkana bathil enga eruku....Thadanum....

    ReplyDelete
  3. மிக அருமையான கருத்துக்கள் - மட்கோப்04

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...