நான் யார்???
என்னை நானே தேடிக்கொள்வதற்காக எழுதுகிறேன். நான் யார்?? என்னை படைத்தின் நோக்கம் என்ன?? எதற்காக வாழ்கிறேன்?? யாருக்காக?? என் திறமை என்ன?? இவைகளுக்கு பதில் தேட தொடங்கியதே என் எழுத்தின் நோக்கம். ஆகையால் முதலில் என்னை பற்றி கூறுகிறேன். வார்த்தைக்கும் பொருளுக்கும் இடையே மாய வாழ்க்கையை நடத்துபவள் நான்.
வருத்தம்... வேதனை... என்ற கிணற்றில் சிக்கிய தவளையாய் நானும் இருந்திருக்கிறேன். என்னையே கெஞ்சிக் கொண்டும் சகித்துக் கொண்டும் ஒவ்வொரு நாட்களையும் கடந்தும் இருகிறேன்.
காலத்தின் மிகப்பெரிய சவுக்கடி யாராலும் கவனிக்கப்படாதது தான்.காதலிப்பதை விட காதலிக்கப் படுவதே இன்பமாம்.அதைருசிக்காதவர்களும் நானும் ஒருவளே.
பல உள்ளங்களோடு பேசி ஏமாந்த பிறகே என் உணர்ச்சியோடு உறவாடிக் கொண்டிருக்கிறேன். இங்கே வேஷம் போட்டும் கோஷம் போட்டும் பழகியவர்கள் மத்தியில் நான் உண்மையில் யார் என்பதை மறந்தேவிட்டேன்.
நடுஇரவில்
செல்லாது போன ஆயிரம் ரூபாய் தாள் போல நான் இங்கே வாழ தகுதியற்றவள் என்று மனம்
மொழிகிறது.
காதல் மீது எனக்கு என்றுமே தீராத காதல் தான். தன்னையே ரசிக்க கற்றுத்தரும் கல்விக்கூடம் அல்லவா??.என்றுமே காதல் மீது எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் இன்று கொண்டாடி களைத்துப் போகும் காதலர்கள் மீது இல்லை.
கடவுளால் கொடுக்க முடியாததை கற்பனைகள் கொடுத்துவிடுமே.பல நாட்கள் கனவு கூடத்தில் இன்பம் பயின்று இன்று பக்குவசாலியாய் உங்களிடம் பேசிக்கொண்டு இருப்பதில் மகிழ்ச்சி!!
பாதாளத்தின் விழும்பில் சிறு நம்பிக்கையை கொண்டு நடந்தே என் பால்கனிக்கு வந்து சேர்ந்தேன். மீண்டும் மார்கழி மலராய் மணம் வீச இன்று உங்களோடு உரை(ற)யாடிக் கொண்டிருக்கிறேன்.
ஆங்கிலம் கற்றாலும் தமிழிலின் மீதான காதல் குறையவே இல்லை. அவளின் ஆறுதலாலும் அரவனைப்பாலும் சில கவிதை கிருக்க கற்றுக்கொண்டேன்.
வாசிப்புக்கு நன்றி.
அடுத்த பதிவில் கவிதைகள் காத்துகிடக்கிறது!!

🔥
ReplyDeleteநன்றி
Deleteஅருமை ��
ReplyDeleteநன்றி
DeleteFantastic 😍😍
ReplyDeleteகாதல் மீது எனக்கு என்றுமே தீராத காதல் தான். தன்னையே ரசிக்க கற்றுத்தரும் கல்விக்கூடம் அல்லவா?? Superb..,
கடவுளால் கொடுக்க முடியாததை கற்பனைகள் கொடுத்துவிடுமே.. Fav 😍👌
awww... நன்றி
DeleteReally superb mam ❣️💯✨
ReplyDeleteநன்றி
Deleteகடவுளால் கொடுக்க முடியாததை கற்பனைகள் கொடுத்துவிடுமே...
ReplyDeleteஅருமையான வரிகள்.... வாழ்க வளர்க
நன்றி
Delete🌸❤Wow semmmmmaa mam❤👀
ReplyDeleteநன்றி
DeleteVery nice
ReplyDeleteநன்றி
Delete🥰 u always unique
ReplyDeleteதமிழ் வலைப்பதிவுக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் அக்கா. தொடர்ந்து எழுதுங்கள். தேடலில் பயணம் சுவாரசியமாக அமைய பேரன்பு வாழ்த்துகள் கவிதாயினி சுவன்தீத்தா அவர்களே.
ReplyDeleteஅடைமொழி பெயரை விரைவில் கலைத்து சுயப்பெயரில் எழுத முயற்சி எடுத்தால் இன்னும் மனநிறைவாக இருக்கும் அக்கா. அடைமொழி பெயருடன் தான் பல பேர் எழுதுகிறார்கள் சிலர் மட்டுமே விதிவிலக்கு.
வாழ்க தமிழ் வளர்க தமிழினம். வெல்க கணித்தமிழ்.
அடைமொழியில் எழுதுவதன் நோக்கம் உனக்கு நன்றாக தெரியும். நன்றி தங்காள்
Deletearumai
ReplyDeleteநன்றி
DeleteI really admire the way you express your feelings. Long way to go...
ReplyDeletethank you so much. keep supporting
DeleteSuper any..
ReplyDeleteநன்றி
DeleteSuper Anu
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
Deleteஅருமை அருமை - மட்கோப்04
ReplyDeleteநன்றி
Deleteமிக அருமை. தமிழ் மீதான உங்கள் நேசம் தொடரட்டும். வாழ்த்துக்கள்
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
DeleteWow super
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
DeleteThank you for your appreciation. keep supporting.
ReplyDelete