அன்னியம்
25 வருடமாக பெற்றெடுத்த பிள்ளையை ஒரு அன்னியனுக்கு திருமணம் செய்து வைத்த பின் தன் கடமை முடிந்தது என உங்களால் எப்படி எண்ண முடிகிறது??
அக்கினியை அவள் வலம் வந்ததும் ஈன்றெடுத்தவரே அந்நியமாய் உங்களால் எப்படி முடிகிறது???
தலை நிமிர்ந்து நட என கூறிய உங்கள் வளர்ப்பு, திருமணமானதும் எதிர்த்துப் பேசாதே என்று சொல்ல உங்களால் எப்படி முடிகிறது???
நேர்கொண்டு பார்வை நிமிர்ந்த நன்னடை என்றெல்லாம் ஊட்டி வளர்த்த உங்களால், கணவன் அடித்தாலும் சத்தம் போட்டு கூட அழக்கூடாது என்று சொல்ல உங்களால் எப்படி முடிகிறது???
திருமணம் முடிந்து அவள் உங்கள் வீடு வந்தாள் உங்களால் அவளை விருந்தாளி என எப்படி உங்களால் உபசரிக்க முடிகிறது ???
தன் பிள்ளையை காட்டிலும் மருமகனுக்கு பிடித்ததே சமைக்க வேண்டும் என்று உங்களால் எப்படி எண்ண முடிகிறது???
போகின்ற வீட்டிலும் சரி உங்கள் வீட்டிலும் சரி திருமணத்திற்கு பின் அவள் எங்கு தான் ஓய்வெடுப்பாள்??
குடிப்பழக்கம் தப்பு என்று சொல்லி வளர்த்த நீங்கள் கணவன் என்றால் குடிப்பான் சகித்துக் வாழ கற்றுக்கொள் என்று சொல்ல உங்களால் எப்படி முடிகிறது???
சுய கௌரவம் சொந்த உழைப்பில் தான் வாழ வேண்டும் என்றுதானே வந்தீர்கள்??? இன்று கணவனுக்கு பிடிக்கவில்லையா விட்டுவிடு என்று சாதாரனமாக சொல்ல உங்களால் எப்படி முடிகிறது???
திருமணமாகி உங்களை காணலாம் என்று ஆசையோடும் ஏக்கத்தோடும் வரும் மகளுக்கு நீங்கள் தரும் பரிசு சில கேள்விகளே.....
* மாப்பிள்ளை வரவில்லையா??
* ஏன் தனியாக வந்திருக்கிறாய்?? இதையெல்லாம் கேட்க உங்களால் எப்படி முடிகிறது???
எப்பொழுதய்யா மகளை விட மகளை மணந்தவன் பெரியவனான்??
உங்கள் பிள்ளையை நீங்களே உதாசீனம் படுத்தும் பொழுது அவள் புகுந்த வீட்டில் அவளை நிராகரிப்பது இயல்பு தானோ??
இத்தனை வருடம் தவழ்ந்து நடந்து ஓடி ஆடி விளையாடிய அவள் வீட்டில் அவளுக்கு உரிமை பறிக்கப்பட்ட பொழுதும், அவள் எந்த வீட்டிற்கு சென்றாலும் அந்த வீடு அவளுக்கு சொந்தம் ஆகிவிடுமா?
தன்வீடும் தனக்கு சொந்தம் இல்லை... சென்று வீட்டிலும் நம்பளால் சொந்தம் கொண்டாட முடியவில்லை... என்று தவிக்கும் அவள் தவிப்பை, அவள் யாரிடம் தான் கொட்டி தீர்ப்பாள்??
யாரிடம் தான் சொல்ல முடியும்??
உங்களுக்காகவும் ஊருக்காகவும் உறவுகளுக்காகவும் அவள் தினம் தினம் அக்னி பரிட்சையை மேற்கொண்டு சகித்துத்தான் வாழ வேண்டுமா???
ஆசைகள் கனவுகள் எல்லாம் புதைத்து விட்டு கணவனே போதும் என்று வாழ சொல்வது சரியா? அதற்கு எதற்கு பெற்றீர்கள்? ஆசைகாட்டி வந்தீர்கள்? மருமகனும் மனிதன் தானே? அவரும் தவறு செய்யலாம் அல்லவா?
pc: Anindita Nag
உலகமே அவளை வெறுக்கலாம்.... உலகமே அவளை துண்டு துண்டாக உடைக்கலாம்....
அனைத்தையும் பொறுக்கி சேர்த்துக் கொண்டு....
உங்கள் வாசலில் தானே அவள் வந்து நிற்பாள்....
அவளை நோக்கி உங்களால் எப்படி விமர்சிக்க முடிகிறது ???
அவளை மணந்தவன் புரிந்து கொள்ளாமல் போகலாம். ஊரார் உபதேசம் செய்யலாம். உற்றார் விமர்சனம் செய்யலாம். ஆனால் இவை அனைத்தும் அவள் விரல்களை கூட காயப்படுத்தாது. ஆனால் நீங்கள் கேட்கும் ஒரு சிறு சொல்லானது அவள் உயிரை சுக்குநூறாக உடைத்து விடும்.
ஈன்றெடுத்த இறைவான்களே... வாழும்போதே அவளுக்கு நரகத்தை காட்ட உங்களால் எப்படி முடிகிறது??
பெற்றவர்களே....
உங்கள் பிள்ளைகள் சத்தம் போட்டு கூச்சலிட்ட காலமெல்லாம் சென்று....
நித்தம் ஒரு யுத்தம் சென்று போராடுகிறாள்.....
என்றாவது ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு அவள் வந்தால்.... "நீ என் பிள்ளை அம்மா உனக்கு நான் என்றும் துணை இருப்பேன்" என்ற நம்பிக்கையை கொடுங்கள். அவள் உங்களிடம் எதிர்பார்ப்பது அது மட்டுமே!!
புகுந்த வீடு சென்றவுடன் பிறந்த வீடு அன்னியமாய் போகின்ற சாபம் என்று தான் பெண்களுக்கு நீங்குமோ???
அவனை வரச் சொல்லுங்கள்..... "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்று சொன்னவனை வரச் சொல்லுங்கள்.
வசித்தமைக்கு நன்றி

Nice ❤️
ReplyDelete