அட யார்ரா இவள்???

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் பாரதியார்.

 பாவம் !  அவர் ஒரு ஆண் என்பதால் பெண்கள் படும் இன்னல்களை புரிந்து கொள்ளவில்லை.  ஒல்லியாக இருந்தால், உடல் சற்று பருமனாக இருந்தால், சற்று மாநிறம் ஆக இருந்தால், உயரம் கொஞ்சம் கம்மியாக இருந்தால், அதே உயரம் சற்று அதிகமாக இருந்தால், நடந்தால், சிரித்தால், பேசினால் என்று எது சொன்னாலும் அவளைக் கைகாட்ட ஒரு ஆள்காட்டி விரல் சூழ்ந்து கொண்டு இருக்கிறது.

 பிறப்பிலிருந்து அவள் பெற்றோர்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்கிறாள் .  சற்று வளர்ந்த பின்னே கணவருக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்று வடிவமைக்கப்படுகிறாள். குழந்தை பெற்ற பின் குழந்தைகளுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள். இதற்கு இடையே அவ்வப்போது சின்ன சின்ன சுதந்திரங்களை அவள் பெற்று அதுவே நம் வாழ்வை நகர்த்தி செல்லும் திரவ சக்தியாக தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறாள்.




 உலகில் 94 சதவீதம் பெண்கள் பாடி ஷேமிங் எனப்படும் பெரும் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இது அவர்களாக தங்கள் உடம்பை நேசிக்க இயலாமல் அல்ல....  பிற அன்னிய சக்திகளால் அடுத்தவர்களுக்கு பிடித்தவர் போல் இருக்க வேண்டும் என்று சிலர். 
 சிலர் கட்டாயத்தின் பேரில் தன் உடலை நேசிக்க மறுக்கின்றனர்.

 உடுத்தும் உடையிலிருந்து உண்ணும் உணவு வரை அவளுக்கு எல்லாத்திலேயுமே கட்டுப்பாடு.

 நான் பெண்ணியம் பேசவில்லை.... பெண்களைப் பற்றி தான் பேசுகிறேன்..

இதை அனைத்திற்குமே ஆண்கள் என்று பெயர் சூட்டி அவர்கள் மேல் பழி போட விரும்பவில்லை.

 மனிதமே வாழுவோம்! இந்த உலகத்தில் அனைத்து உயிரினங்களுக்கும்  சமமாக வாழ உரிமை உண்டு. அடுத்தவர்கள் சொல்படி கேட்டு வாழ்வதற்கு இது சினிமா அல்ல ... ஒவ்வொருவரின் உணர்வும் வாழ்வும் கனவும் அடங்கியது.

 புரிந்து வாழ்க !!

வாசித்ததற்கு நன்றி!!

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...