கொடிய விஷம்

  வாசிப்பாளர்களுக்கு வணக்கம் எ பாய்சன் டிரி ( A Poison Tree) என்ற ஒரு கவிதையை இன்று தான் படித்தேன். வில்லியம் பிளேக் என்பவரால் இது அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.  எனக்கு எப்படி இது சரியான நேரத்தில் என் பார்வை சிக்கியபடி உங்களில் சிலருக்கும் இது பயன்படலாம் என்று இங்கு பகிர்கிறேன்.


உலகிலேயே மிகக் கொடிய விஷம் எது என்று இந்த கவிதை நமக்கு அறிய வைக்கும்

தனது முதலாவது வரியில் என் நண்பரோடு நான் கோபமாக இருந்தேன். அதை அவரிடம் வெளிப்படுத்தினேன் ஆகையால் அது அத்தோடு நின்று விட்டது என்றும் தனது மூன்றாவது வரியில் நான் என் எதிரியுடன் கோபமாக இருந்தேன். ஆனால் நான் அதை அவனிடம் சொல்லவில்லை. ஆகையால் அந்த கோபம் எனக்குள் அதிகமாக வளர்ந்தது என்றும்  தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். 

அடுத்து நான் அந்த கோபத்திற்கு தினமும் பயத்தால்... தண்ணீர் விட்டு வளர்த்தும் இரவும் பகலுமாய் கண்ணீர் விட்டு அழுதும் வெயிலில் சிரித்துக்கொண்டே வளர்த்தேன். எனக்குள் நானே அன்பாக ஏமாற்றி பேசி அதை வளர்த்துக் கொண்டேன் அதனால் திடீரென்று ஒரு நாள் எதிர்பாராமல் அந்த கோபம் என்ற மரத்தில் சிவப்பாக அழகான ஒரு ஆப்பிள் முளைத்தது. 

என் நண்பனுக்கு அது தெரியும் அந்தப் பழம் பழுத்ததற்கு காரணம் நான் என்று. ஆகையால் எனக்கே தெரியாமல் ஒரு நாள் அவன் இரவில் அந்த பழத்தை திருடி சாப்பிட்டு விட்டான். காலையில் நான் எழுந்து பார்க்கும் பொழுது அவன் இறந்து கிடந்தான். இதுவே அந்த கவிதையின் பொருள். 

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய கோபம் எப்பொழுதுமே வெளிப்படுத்தவேண்டும். ஒருவர் மேல் நாம் கோபம் கொள்வது இயல்புதான். ஆனால் அதை மனதிற்குள் வைத்துக் கொண்டே இருந்தால் கொடிய விஷமாக மாறும். அந்த கொடிய விஷம் நீங்கள் யார் மீது கோபம் கொண்டு உள்ளீர்களோ அது அவர்களை அழித்துவிடும் இல்லையே உங்களை அழித்து விடும். 

சற்று யோசித்துப் பாருங்கள் நீங்கள் நாளை பேசிக் கொள்ளலாம் என்று இன்று சண்டையிட்டுக் கொண்ட நபரிடம் பேசாமல் போனால்.... நீங்கள் சமாதானம் செய்யாமல், தவறை எண்ணி மன்னிப்பு கேட்காமல் போன அந்த நபர் அடுத்த நாள் காலையில் விழித்துப் பார்க்கையில் உங்கள் பார்வைக்கு நிரந்தரமாக காணாமல் போனால்.... உங்களை உங்களால் மன்னிக்க இயலுமா? 

கோபம் வந்துவிட்டால் சிறிது நேரம் நிதானிப்பது அவசியம் தான். அதற்காக பொறுமை என்ற பெயரில் ஒவ்வொரு நாளும் தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றால் ஒரு நாள் உங்களை நீங்கள் மன்னிக்க இயலாமல் போய்விடும். 

உலகிலேயே மிகக் கொடிய விஷயம்:  கோபம் அதைவிடக் கொடியது:  கோபத்தை வெளிப்படுத்தாமல் மனதிற்குள் வைத்துக்கண்டு... காயப்படுவது

பேசித் தீராத பிரச்சனை என்று எதுவும் இல்லை. ஒருமுறை  மனம் திறந்து பேசினால் மார்க்கமுண்டு. ஒரு முறை இந்த பதிவிற்காக நீங்கள் யாரிடம் எல்லாம் கோபம் கொண்டீர்களோ அவர்களிடம் எல்லாம் ஒரு முறை அமைதியாக உங்களின் கோபங்களையும் சங்கடங்களையும் காயங்களையும் ஒருமுறை அவரிடம் பகிர்ந்து பாருங்கள். 

இன்று இரவு நிச்சயமாக நிம்மதியாக உறங்கலாம். 

வாசிப்போம் சுவாசம் உள்ளவரை! 

நன்றி 

Comments

  1. Kova padalana thalaila molaga arachuruvanga....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எழுதியவை யாவும் சரியே.‌ ஆயினும், தாங்கள் இக்கட்டுரையினை எழுதியபின் சரிபார்க்கவில்லை அல்லது தங்களுக்கு நேரமில்லை என எண்ணுகிறேன். விரல்விட்டு என்னக்கூடிய அளவிற்கு பிழைகள் உள்ளன. அவை உங்களது விசைப்பலகை செயலியால் கூட ஏற்பட்டிருக்கலாம். மற்றுமொரு செயல் என்னவென்றால் உங்களது நடை. தூயதமிழ் நடையும், பேச்சுவழக்கு நடையும் சேர்ந்த ஒன்று. அது புதுமையான ஒன்றாக இருப்பினும், தாங்கள் அவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தினீர்களானால் சிறப்பு. இப்படிக்கு, தங்களை நேரில் கண்டு அனுபவப்பட்ட நலன் விரும்பி.

      Delete
    2. தங்களின் கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி

      Delete
  2. Sema sema... Really a good one! Keep going...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...