காதலை காதில் வாங்கிக் கொள்ளுங்கள்
காதலைப் பற்றி எத்தனையோ பாடல் வந்தாலும். ...
எத்தனையோ கதைகள் சொன்னாலும்...
காதல்...
காதல் தான்!
சலித்துப் போகாத ஒரே சுவை காதல் சுவை தானோ? ஆனால் காதலில் கடைசிவரை என்ற தத்துவம் மட்டும் பொய்தானோ ?
எல்லார் பக்கமும் ஒரு நியாயம் இருப்பது போல, எல்லோர் வாழ்விலும் ஒரு காதல் இருக்கும். அழகான முதல் காதல்! அழிவில்லாத முதல் காதல்!
நீ யாரென்று உனக்கே பாடம் கற்பிக்கும்.
எதற்கு கோபப்பட்டோம் என்று உன் மீது கோபப்பட வைக்கும்.
இதற்கா அழுதோம் என்று நினைக்கும் போதெல்லாம் சிரிக்கவைக்கும்.
இப்படி எல்லாம் சிரித்தோமா என்று நினைத்து அழ வைக்கும்.
முகம் கழுவாத முகத்தில் முதன்முதலாய முகப்பரு தோன்றும்.
அழுக்குச் சட்டை வானவிலாகும்.
காதல் பார்வைக்காக காலங்களை கடந்து கால்கள் ஒரே இடத்தில் யாகம் செய்யும்.
அந்த ஒற்றை சிரிப்புக்காக உயிர் மலர்களும் பூத்துக் குலுங்கும்...
தன்னைத்தானே அழகாய் காட்டும் மாயக்கண்ணாடி காதல்.
தன்னைச் சார்ந்தவர்களுக்கு தர்மன் அவதாரம். சில நேரங்களில் இச்சை மனம் துச்சை கொண்டதால் துச்சாதனனும் ஆகும்.
முதல் காதல். .. முதல் குழந்தையை போல. அனுபவமில்லாத ஆனந்தம். எதிர்பார்க்காத ஏகாந்தம். எப்படி அதை வளர்க்க வேண்டும் என்று தெரியாமல் ஒரு குழந்தையோடு சேர்ந்து பெற்றோரும் வளர்வது போல... முதல் காதலோடு ஒரு மனிதன் முழுமை பெற தொடங்குகிறான்.
காதல் கடைசிவரை வரும் என்பது மட்டும் காதலில் எழுதப்பட்ட முதல் பொய். காதல் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்...போகலாம். ஆனால் காதல்...காதல் தான்.
ஏன் நம்மை விட்டு சென்றனர்? ஏன் இப்படி செய்தனர்? என யோசித்து அவர்கள் செய்த சில நாள் தவறை நினைத்து வெறுப்பதை விட , பல இனிமையான அழகான நாட்களை நினைத்து,
அவர்களையும் அவர்களோடு சேர்ந்த நம் நினைவுகளையும அழகாகக்குவோம்.
வாசிப்போம் சுவாசம் உள்ளவரை!
நன்றி.
காதல் அதுதான் வாழ்வின் ஆதாரம். வயது நிறம் மொழி இனம் காலம் இவை எல்லாவற்றையும் கடந்தது தான் காதல். வரையறையற்ற ஓர் அற்புதமான உணர்வு. முதலும் முடிவும் கூட காதல் தான். அருமையான பதிவு அக்கா.
ReplyDeleteSuper lines all r true line which impress me a lot
ReplyDelete❤️❤️❤️😍
ReplyDeleteமிக நன்று
ReplyDelete