ஆபாசகார்களுக்கு மட்டும் இது!!


    இன்னைக்கு என்ன எழுதலாம்-ன்னு  யோசிக்கும்போது நேற்று இன்ஸ்டாகிராமில் ஒரு நேரலை நிகழ்ச்சியில் எனது மாணவி தான் தொகுப்பாளர் என்பதால் சற்று ஆவலுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அவள் நிகழ்ச்சியின் விருந்தாளர், பத்தாவது படித்து முடித்த ஒரு குட்டி தேவதை.  அவர்கள் இருவரின் உரையாடலில் நான் மகிழ்ந்து இருந்தபோது கீழே சில ஆபாச அழைப்புகளை(comments) கண்டேன்.
    கர்ப்பம் சுமக்கும் மட்டும் பெண்களை கைகுலுக்கி வரவேற்கும் சமுதாயமே!!எங்களை வெறும் காமத்திற்காக மட்டுமே பார்ப்பது ஏன் ??


    பெண்களை ஆபாசமாக பார்க்கும் போதெல்லாம் உன் கூட அக்கா தங்கச்சி பொறக்கல??  உனக்கு அம்மா இல்லை ?? என்று பேசுவது கூட தவறுதான் ஏனென்றால் அவர்களுக்கு கூட உன்னிடம் பாதுகாப்பு இல்லை.

     இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பரபரப்பு செய்தி. 60வயது  நிறைந்த  பெண்மணியை எவனோ ஒருவன் பாலியல் தொல்லை செய்தானாம். 6 மாதத்தில் தொடங்கி 60 வயது வரை அவர்கள் உடை உங்களை அழைக்கிறது அப்படிதானே??

     என் உடலை நேசிக்கும் நீ
என் உடையை விமர்சிக்கும் நீ
என் உணர்வுகளையும் சற்று கேளு
.
    வீதிகளில் விளையாடித் திரியும் அந்த மலர்கள் மோகம் காட்டினாளா என்ன?? நோயுற்று கட்டிலில் கிடந்த கிழவி காமத்தை தூண்டினாலா??

    உங்களை சபிக்க கூட எனக்கு மனம் வரவில்லை...  என்னவென்று சொல்வது அடுத்த பிறவியில் பெண்ணாய் பிற என்றா?  நீ மனிதனாய் இருக்கவே தகுதியற்றவன்.  வேறு உயிரினமாக சபிக்க வேண்டுமா??  வேண்டாம் அதற்கும் கூட மனிதம் உள்ளது. உன்னை போல் மதியிழந்து மானம் கெட்டு வாழாது. 

    அண்ணா என்று சொல்லி இருந்தால் அனைத்து இருக்க மாட்டாயாம்?? யாரிடம் கதை விடுகிறாய்??  அப்பா என்று காலில் விழுந்தாலும் ஆபாசமாகப் பேசுபவனே நீ.

    ஆபாசத்தை ஆதரிக்கும் நீ அவளை விபச்சாரி என அழைக்க உனக்கு தகுதி உள்ளதா?? பொய் கணக்கு எழுத மட்டுமா உன் பேனவா?? அரசே??

    மே மாத 98-யில் மேஜர் ஆனேனே பாடலில்  அழகான ஒரு வரி  பெண் மார்புக்குள் ஒரு மனசுன்டு உண்டு அட அதையும் பாருங்க என்று சொல்லி முடிக்கிறேன்.

                               வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

Comments

  1. Miss Swanthitha(anu) ..sela aangal seikinra thavaruku Ella aangalum poruppu agathu...Thavaru seikenra varkalai entha ulagam marakatha mathire thandekka vendum entha arasangam....

    ReplyDelete
    Replies
    1. that's true my friend. but who is getting punished?? read my title it is not for all. it's for those who is doing this third rated things. thank you for reading.

      Delete
  2. அருமையான பதிவு Mam.

    ReplyDelete
  3. 🔥something that every man should know

    ReplyDelete
  4. Well said Anu. Keep rocking

    ReplyDelete
  5. மாற்றத்தை தொடங்குவோம் , நம் வீட்டு பிள்ளைகளில் இருந்து ...
    காமத்தை பற்றி சொல்லி கொடுத்து வளர்க்கும் பெற்றோர் இதில் எத்தனை பேர் தோழி ... ??வீட்டில் அதை பற்றி பேசுவது தவறு என்ற பின்பம் உடையும் போது அடுத்த தலைமுறைக்கு பெண்களின் மீது மரியாதை தானக வரும் ����✨

    ReplyDelete
  6. Every person should read this‌💯. Everyone should know about women feelings, and must give respect fr them. Really superb mam👌

    ReplyDelete
  7. பெண்கள் பலர் ஆபாச ஆண்களை நோக்கி போகிறார்களே..... தங்கள் வார்தை பெண்களை நோக்குமா??

    ReplyDelete
    Replies
    1. சில பெண்கள் சுதந்திரம் என்னும் பெயரில் சீர் அலிகிறார்கள் தான். அவர்களை தொடராமால் ஏன் எங்களை கொள்கிறீர்கள்?? விபச்சார விடுதி இருந்தும் வீதியில் செல்பவர் மீது ஏன் கை வைக்கிறாய்?? அந்த ஈவற்ற அயோகியன்களுக்காக வாதாட வந்தவரே.... குழந்தை என்று பாராமல் வீதியில் காரியம் முடிந்ததும் வீசப்படும் அவர்கள் உடலை காண வரும் பெற்றோரின் குமரல்கலை கேள். அப்போதவது உன் இதயத்தில் ஈரம் சுரக்கிறதா என்று பார்க்கிறேன்.

      Delete
  8. பெண்கள் பலர் ஆபாச ஆண்களை நோக்கி போகிறார்களே..... தங்கள் வார்தை பெண்களை நோக்குமா??

    ReplyDelete
    Replies
    1. அவளை ஆபாசமாக்கியது நீங்கள் தான் என்று நான் நினைவு படுத்த வேண்டுமா?? பச்சிலங்குழந்தையை சீர் அழித்தவனுக்கு சீபாரிசா நீங்கள்???

      Delete
  9. Super mam ... Correct ah sonega.... Keep rocking babe...

    ReplyDelete
  10. நன்றி என் செல்வமே

    ReplyDelete
  11. மதம் பிடித்த யானையினும் கொடியவன் காமம் கொண்ட மனிதன்

    ReplyDelete
  12. Ennam Pol Vaazhkai Silarin Ennangal Silarukku Verupadugal Kaatum So Kanmani Maaridum nu sollala Maaruna Nalla Irukkum nu solren... Bcuse we'll lived in a group of society if it happens definitely someone have the cost.... But your thoughts and words are wonderful with touched lines Kanmani💜💜💜💜💜👍👍👍👍👍👍👍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...