இந்த காதல் வேறு!!


    கல்யாணத்தில் முடிவது காதல் அல்ல.. காலம் கடந்தும் கை கோர்த்து செல்வது காதல்.

    காமம் தீர்ந்ததும் காதல் முடிந்து விடும் இந்த காலத்தில்,  கண்களால் கவிதை எழுதி...  பார்வையால் பாசைகள் பேசி....  வாழ்நாள் முழுவதும் காவியம் படைக்க கற்று கொள்ளுங்கள். 

    கோவம்  வரும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் கட்டிக் கொள்ளுங்கள்!! முரண்பாடுகள் தோன்றும் போதெல்லாம் முத்தமிட்டுக் கொள்ளுங்கள்!!.

    வாழ்க்கையில் ஒரு நிமிடக்காதல் கிடைப்பதே வரம் அக்காதலையே கரம்பிடிப்பது என்பது பாக்கியம். கல்யாணத்திற்கு முன் காதல் செய்பவர்களே... கல்யாணத்திற்க்கு பிறகு காதலிக்க கூடாதா என்ன??

     பெரிய பரிசு தேடி...  ஒருவரை ஒருவர் பகிர்ந்து மகிழ்ச்சி பெற கூட தேவையில்லை ....  அவ்வப்போது  காதல் பார்வை மாற்றிக்கொள்ளுங்கள்.

      வாய்மொழியில் உரையாடுவதை விட விழிமொழியின் உறவாடி பாருங்கள் .  உங்களைப் பற்றி உங்களைவிட இன்னொருவர் புரிந்து கொள்வது வரம்.  நீங்கள் அனைவரும் பாக்கியவான்களே...

தோன்றும் போதெல்லாம் தொல்லை செய்வதற்கும்,
சலிக்கும் போதெல்லாம் சண்டை கொள்வதற்க்கும்,
நோய்ப்பட்டால்  நோந்து போவதற்க்கும்,
மகிழ்ச்சியின் மழையில் நினைவதற்க்கும்,
விவாதம் செய்ய விரைந்து வருவதற்க்கும்,
ஒருவர் கிடைப்பது எவ்வளவு பெரிய வரம்??

     காசு இல்லாத போதும் காதல் இருக்கிறது என கொண்டாடுங்கள். போங்க ... நம்மை நாமே வெறுக்கும் இந்த காலத்தில் நம்மையும் சேர்த்து நேசிக்கக் கற்றுத் தருபவர்கள் அவர்கள்தானே??

     உன்னை நீயே ஒரு முறை கண்ணாடியில் பார்க்க விரும்பாத போது... இன்று பலமுறை எனக்கென்ன அழகாகத்தான் இருக்கிறேன் என்று சொல்ல வைப்பவர்கள் அவர்கள்தான்.


Picture Courtesy : Nandhini.S

    காதலில் குறைகளெல்லாம் நிறைகள் ஆகின்றனர். நிலைகளெல்லாம் குறைவாகத்தான் கொள்கின்றனர் .குறை சொல்லி உன் காதலை குறித்துக் கொள்ளாதே...

     காலம் முழுவதும்  எவ்வளவு சண்டை போட்டாலும் இரவில் விரல் கோர்த்து உறங்குங்கள். வேலைப்பளு காரணமாக விரைந்து ஓடி இருந்தாலும் இரவு வேளையில் ஒன்றாக சேர்ந்து உண்ணுங்கள். ஒவ்வொரு நாளும் உணவுக் கொள்கையில் முதலில் ஊட்டி  கொள்ளுங்கள்.  பேரப்  பிள்ளைகளை பிறந்தாலும் உங்கள் பேரன்பை மறவாதே.

காதல் ஓர் கவிதை!
அதில் வாழ்வது வரம்!!

(பின் குறிப்பு; காதல் கிடைக்கவில்லை என்று வருந்தாதே...
உன் கரங்களை பத்திரப்படுத்திக் கொள்!!
விரைந்து வருவார்கள்.
காதல் உங்களையும் அணைக்கும்)


                                            வாழ்த்துக்கள்!!

                          வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

 

Comments

  1. Replies
    1. waiting for that someone special is always exciting. so be calm

      Delete
  2. அடடே காலத்தை வென்ற காவியக்காதல் போல ஒரு மடலா? அற்புதம்.. நான் என் கை விரல்களை பத்திரப்படுத்தி கொள்கிறேன். எனக்கான என்னவன் வருவான் என்ற நம்பிக்கையில்... அன்பின் நிறைவு காமம்.. காதலின் நிறைவு வாழ்க்கையின் முடிவு..

    என்னை நானே காதலிப்பதில் மகிழ்கிறேன்.வாழ்த்துகள் கவிதாயினி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகி. காத்திருப்பதில் தவறில்லை. காதல் கை கூட வாழ்த்துக்கள்!!

      Delete
  3. Mam ❤❤❤😍🥰✨💐arumaiyana varigal

    ReplyDelete
  4. Varigal matrum Vaarthaigal arumai Kanmani.... Kadhalil kooda ethartha unarvai eduthu kaatiya unadhu Kavi idhazhgalukkum Eludhiya penavirukkum vaazhthukkal Kanmani....

    ReplyDelete
    Replies
    1. Thank you for your appreciation சகோ. Keep supporting.

      Delete
  5. Fabulous mam ❣️✨💯👌

    ReplyDelete
  6. Kadhal...Anbu...evvaru eruka vendum enbatharkana varigal...😍😍😍😍

    ReplyDelete
  7. Each and every lines are made me to feel♥️😍... Super mam♥️

    ReplyDelete
  8. Wow fantastic, keep going well 👍👍👍

    ReplyDelete
    Replies
    1. Thank you for your appreciation. Keep supporting.

      Delete
  9. Nice kavithai about love dr.. Truly love makes our life happy dr..

    ReplyDelete
    Replies
    1. you actually got that. Thank you for your appreciation. Keep supporting.

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...