ஏக்கமா??
யாரோ ??
நாம் அனைவரும் எத்தனை
சாதனைகள் செய்தாலும் எத்தனை வேதனை கொண்டாலும் யாரோ ஒருவரின் அன்பிற்காகவும்
அரவணைப்புகாகவும் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். அந்த ஒருவர் யார்
??இவளா ?? அவனா?? அதுவா?? இதுவா?? என்று பல இடங்களில் முட்டிமோதி அடிபட்டு
வீடு திரும்பியிருக்கிறோம்.
ஆனால் அந்த ஒருவர் யார் என்று இன்று வரை தெரியவில்லை அல்லவா??
இதோ
நான் சொல்கின்றேன்... வாழ்க்கை பக்கங்களில் உன்னை இடைவிடாமல் இணைந்தே
பயணிக்கும் அந்த ஒருவர் நீதான்!! காலத்தின் கட்டளைப்படி அவரவர் காட்சி
முடிந்ததும் காணாமல் போகின்றனர். இது காலத்தின் பிழையல்ல உன் கருத்தின்
பிழை.
சற்று யோசித்துப்
பாருங்கள் ஒவ்வொரு முறை நீ விழும் போதும் ஏதாவது ஒரு கை உன்னை தூக்கி
நிறுத்தி இருக்கும். ஒவ்வொரு முறை நீ சிரித்தபோது உன்னோடு சேர்ந்து சில இதழ்கள்
நகைத்திருக்கும். உனக்கே தெரியாமல்!!
சிரிக்கும்
நம் இதழில் சுரங்களில் எல்லாம் பல அவமானச் சரித்திரம் மறைந்து கிடைக்கத்தான் செய்கின்றன.
கடவுள்
அவ்வப்போது சிலரை உனக்காக அனுப்பி வைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்.
ஆனால் நீயோ அவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு நிரந்திர நண்பனை
தேடிக்கொண்டிருக்கிறாய். உனக்காக துடித்துக் கொண்டே இருக்கும் இதயத்திடம்
சற்று இதை கேட்டு பார்.... தனிமை தாங்க முடியாத சுமை அல்ல.. தவிர்க்க முடியாத
தகவல்.
Painting courtesy: Nandhini.S
உன்னை ஏதோ ஒருநாள்
விட்டுச் சென்றவரை நினைத்து நீர் சிந்தாமல் அவர்களோடு பயணித்த இன்ப
பக்கங்களைப் புரட்டிப் பார்...
நீயே அதிர்ஷ்டசாலி.
ஒருநாள் பிரிவை எண்ணி அவர் பரிசலித்த பலநாள்
இன்பங்களை இழந்து விடாதே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றுக்கும் காலம் உண்டு
பிரிவும் உண்டு!!
தனித்து இருப்பவர்கள் எல்லாம் தனிமையிலும் அல்ல... கூட்டத்தில் இருப்பவர் எல்லாம் கூடி இருப்பவரும் அல்ல...
உனக்கு துணை நீயே!!
நீயே நிரந்திரம்!!
நீ ஏங்கி கேட்க வேண்டியது உன்னை மட்டுமே!!
வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

🔥
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
DeleteNice akka
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
DeleteWell create madam...
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
DeleteOld memories...😔😔😔😔😔
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
DeleteGood
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
Delete❣️👌👌👌
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
Delete👍
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
Delete👍
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
Delete👍
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
DeleteU never fail to impress everyone through our words ❤
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
DeleteThank you for your appreciation. keep supporting.
ReplyDeleteSuper anu..
ReplyDelete